விஜய் ரசிகர் கத்தியால் தாக்கியதில் அஜித் ரசிகர் கவலைக்கிடம்

அஜித் - விஜய்

அஜித் ரசிகர் உமா சங்கர் (32), விஜய் ரசிகர் ரோஷன் (34) ஆகிய இருவரும் வசித்து வருகின்றனர். இருவரும் பேசிக்கொண்டிருந்த போது அஜித் ரசிகரான உமா சங்கர் விஜய் குறித்து விமர்சித்ததாக தெரிகிறது

 • News18
 • Last Updated :
 • Share this:
  நடிகர் விஜய் குறித்து விமர்சித்த அஜித் ரசிகரை விஜய் ரசிகர் கத்தியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வருபவர்கள் நடிகர் அஜித் மற்றும் விஜய். இருவருக்கும் ரசிகர்களும் ஏராளம். பட அறிவிப்புகள், ட்ரெய்லர் வெளியீடு என ஒவ்வொரு சிறு நகர்வையும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கி மகிழும் ரசிகர்கள், பல நேரங்களில் ட்விட்டர் போரையே உருவாக்கி விடுகின்றனர்.

  அஜித்தின் நேர்கொண்டபார்வை ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் #ஆகஸ்ட் 8பாடைய கட்டு என்ற ஹேஷ்டேக்கை எதிர்தரப்பினர் ட்ரெண்ட் செய்ய, பதிலுக்கு #ரிப்ஆக்டர்விஜய் என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்யப்பட்டது. அஜித், விஜய் ரசிகர்களின் இந்த செயல் பலரையும் வருத்தமடையச் செய்துள்ளது.

  நடிகர் சிபிராஜ், கிரிக்கெட் வீரர் அஸ்வின் உள்ளிட்டோர் ரசிகர்களின் இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். சமூகவலைதளங்களில் மோதிக் கொண்ட ரசிகர்கள் தற்போது நேரடியாக ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளும் அளவுக்கு நகர்ந்துள்ளது.

  சென்னை புழல் அருகே இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. அந்த முகாமில் அஜித் ரசிகர் உமா சங்கர் (32), விஜய் ரசிகர் ரோஷன் (34) ஆகிய இருவரும் வசித்து வருகின்றனர். இருவரும் பேசிக்கொண்டிருந்த போது அஜித் ரசிகரான உமா சங்கர் விஜய் குறித்து விமர்சித்ததாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியுள்ளது, ஆத்திரமடைந்த விஜய் ரசிகரான ரோஷன் வீட்டுக்குச் சென்று கத்தியை எடுத்துவந்து உமாசங்கரின் தலை கழுத்து, நெஞ்சு உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டியுள்ளார்.

  ரத்த வெள்ளத்தில் சரிந்த உமாசங்கரை அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து அவரது உடல்நிலை மிக மோசமான நிலையில் இருப்பதால் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர். அங்கு உமாசங்கருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  ரோஷனை கைது செய்த புழல் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  படிக்க: விஜய் குறித்த எதிர்மறையான ஹேஷ்டேக் - சிபிராஜ் கோபம்

  வீடியோ பார்க்க: விஜய்யுடன் மோதும் தனுஷ்!

  Published by:Sheik Hanifah
  First published: