ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

முதல்வர் பழனிசாமியிடம் வலிமை அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்!

முதல்வர் பழனிசாமியிடம் வலிமை அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்!

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி - அஜித்

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி - அஜித்

'வலிமை அப்டேட் வாங்கிக் கொடுங்க ஐயா. எங்கள் ஓட்டை உங்களுக்குப் போடுகிறோம்'

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ட்விட்டர் பதிவில் மட்டுமல்லாது அவரது பிரச்சார பயணத்திலும் 'வலிமை' பட அப்டேட் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர் அஜித் ரசிகர்கள்.

  'நேர்கொண்ட பார்வை' திரைப்படத்துக்குப் பிறகு நடிகர் அஜித் மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் 'வலிமை' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அஜித் காவல்துறை அதிகாரியாக நடிக்கும் தகவல் ஏற்கனவே வெளியானது. இதன் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

  Ajith Fans tweet, valimai update
  வலிமை அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்

  'வலிமை' படம் பற்றி ஏதேனும் அப்டேட் கொடுங்கள் என போனி கபூரிடம் அஜித் ரசிகர்கள் கேட்டு கேட்டு டயர்டாகி விட்டனர். ஆனாலும், படம் குறித்த எந்த அதிகாரப்பூர்வ அப்டேட்டும் வெளியாகவில்லை. படம் ஆரம்பித்து பல மாதங்கள் ஆகியும், வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கூட இன்னும் வெளியாகவில்லை என்பதில், ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதன் நீட்சியாக போனிகபூரை கண்டித்து போஸ்டர் ஒட்டும் அளவுக்கு சென்றனர் அஜித் ரசிகர்கள்.

  இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ட்விட்டர் பதிவில் அஜித் ரசிகர் ஒருவர், 'வலிமை அப்டேட் வாங்கிக் கொடுங்க ஐயா. எங்கள் ஓட்டை உங்களுக்குப் போடுகிறோம்' எனத் தெரிவித்திருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலானது. இதனிடையே தேர்தலையொட்டி பிரச்சாரம் செய்து வரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் அஜித் ரசிகர்கள் ‘தலைவா. வலிமை எப்போது வரும்.. வலிமை அப்டேட் கொடுங்க’ என கேட்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Shalini C
  First published:

  Tags: Actor Ajith, Chief Minister Edappadi Palanisamy