ஆலுமா டோலுமா பாடலுக்கு நடனமாடி புத்தாண்டு கொண்டாடிய அஜித்

ஆலுமா டோலுமா பாடலுக்கு நடனமாடி புத்தாண்டு கொண்டாடிய அஜித்

நடிகர் அஜித்

2021-ம் ஆண்டின் முதல் நாளை நடிகர் அஜித் வலிமை படக்குழுவினருடன் கொண்டாடியுள்ளார்.

  • Share this:
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் 60-வது படமாக உருவாகி வருகிறது ‘வலிமை’. போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார். அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் அஜித் ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இந்தப் படத்தில் குக் வித் கோமாளி புகழ் அஜித்துடன் முக்கியமான கேரக்டரில் நடித்திருப்பதாக தகவல் வெளியானது. அதைத்தொடர்ந்து தற்போது ஒரு சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது.

‘வலிமை’  படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வரும் நிலையில் புத்தாண்டை படக்குழுவினருடன் சேர்ந்து அஜித் கொண்டாடியிருப்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து நடன குழுவில் உள்ள ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கும் தகவல் தற்போது ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.

மேலும் படிக்க: பிரபு சாலமனின் ‘காடன்’ திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

அதில் கூறியிருப்பதாவது, “2021-ம் ஆண்டு என் வாழ்வில் இப்படி ஒரு புத்தாண்டை கொண்டாடியதே இல்லை. சரியாக 12 மணிக்கு தல அஜித் பக்கத்தில் நின்று அவரது முகத்தைப் பார்த்து முதல் புத்தாண்டு வாழ்த்து பெற்றேன்.அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியதும் அதன் பின்னர் ஷூட்டிங் ஸ்பாட்டில் ‘ஆலுமா டோலுமா’ பாடல் ஒலிக்க தல ஆடியதும், அவருடன் சேர்ந்து ஆடியதும் மறக்க முடியாது. இது எனக்கு வேற லெவல் உணர்வாக இருந்தது. என் வாழ்க்கையில் இப்படி ஒரு புத்தாண்டு கிடைத்ததற்கு இறைவனுக்கு நன்றி கூறுகிறேன்” என்று கூறியுள்ளார்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sheik Hanifah
First published: