ஒரே நாளில் திரைக்கு வரும் தல, தளபதி படங்கள்... ரசிகர்கள் உற்சாகம்

ஒரே நாளில் திரைக்கு வரும் தல, தளபதி படங்கள்... ரசிகர்கள் உற்சாகம்

அஜித்,விஜய்

தலைவா மற்றும் என்னை அறிந்தால் திரைப்படங்கள் ஒரே நாளில் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.

 • Share this:
  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் விஜய்,அஜித் ரசிகர்கள் இடையே எப்போதும் போட்டியிருப்பது வழக்கமான ஒன்று.மேலும் விஜய் மற்றும் அஜித்தின் திரைப்படங்கள் என்றைக்கு வெளியானாலும் அந்த நாள் தீபாவளி போல் தான் இருக்கும்.இருவருமே ரசிகர்களின் சண்டையை அதிகம் கண்டுக்கொள்ளவில்லை என்றாலும் அடிக்கடி ட்விட்டரில் அஜித்,விஜய் ரசிகர்கள் சண்டைப்போட்டு ட்ரெண்டிங்கில் வந்துவிடுவார்கள்.

  ஆனால் எதிர்பாராத கொரோனா ஊரடங்கின் போது திரையரங்குகள் மூடப்பட்டன.பின்பு 6 மாதங்கள் கழித்து திரையரங்குகள் திறக்கப்பட்டன. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் எந்த ஒரு முன்னணி நடிகர்களின் படமும் திரையரங்குகளுக்கு வரவில்லை

  இதையடுத்து சினிமா பிரியர்களை திரையரங்குகளுக்கு வரவழைக்க ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்ற ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை திரைப்படங்கள் டிசம்பர் 31 ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட்டன.இந்நிலையில் ஜனவரி 8 ஆம் தேதி விஜய் நடிப்பில் வெளிவந்த தலைவா திரைப்படமும்,அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படமும் ஒரே நாளில் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.

  மேலும் மாஸ்டர் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜனவரி 13 ஆம் தேதி திரையரங்குகளுக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Tamilmalar Natarajan
  First published: