அஜித் மற்றும் ஷாலினியுடன் இருப்பது மைக்கேல் ஜாக்சனா? வைரலாகும் புகைப்படங்கள்!
மைக்கேல் ஜாக்சனுடன் அஜித் மற்றும் ஷாலினி இருக்கும் புகைப்படம் ஒன்றை தல அஜித்தின் ரசிகர்கள் இப்போது சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

அஜித் மற்றும் ஷாலினியுடன் இருப்பது மைக்கேல் ஜாக்சனா?
- News18 Tamil
- Last Updated: January 21, 2021, 4:53 PM IST
எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல், தமிழ்த் திரையுலகில் நுழைந்து, தனது கடின உழைப்பால் முன்னேறி, தனக்கென ரசிகர் பட்டாளத்தையே தனது நடிப்பால் உருவாக்கி, அவர்கள் மனத்தில் ‘தல’ என்று நிலைத்திருப்பவர் தான் நடிகர் அஜித் குமார்.
தமிழ் திரையுலகில் நடிகர் அஜித் குமார் "தல", "அல்டிமேட் ஸ்டார்", "காதல் மன்னன்" என்ற பெயர்களில் ரசிகர்கள் மூலம் அழைக்கப்படுபவர் அஜித் குமார். தமிழில் ஒரு முன்னணி நடிகராகவும், சமுதாயத்தில் ஒரு நல்ல குடிமகனாகவும், உலகளவில் பிரபலமான ஒரு எஃப் 1 ரேஸராகவும் (F1 Racer) புகழ் பெற்றவர் நம்ம தல அஜித்.
அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஒரு ஆசிரியராகவும், உலகளவில் பல போட்டிகளில் பங்குபெற்ற ஒரு எஃப் 1 ரேஸர் (F1 Racer) மற்றும் 2018ம் ஆண்டு தமிழக மாநில அளவு துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கு பெற்று புகழ் பெற்றுள்ளார். ரசிகர்கள் மத்தியில் அவரது மாஸ் ஒருபோதும் குறையவில்லை. மைக்கேல் ஜாக்சனுடன் அஜித் மற்றும் ஷாலினி இருக்கும் புகைப்படம் ஒன்றை தல அஜித்தின் ரசிகர்கள் இப்போது சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இந்த புகைப்படத்தில் இருப்பது ஜாக்சன் தானா அல்லது அவர் வேடம் போட்டு நடித்தவரா? என்றெல்லாம் தெரியாது, இருந்தும் தங்கள் ஆஸ்தான நடிகரை எப்போதும் வைரலாக்க நினைக்கும் ரசிகர்கள் அஜித்தின் இந்த படத்தை வேகமாக ஷேர் செய்து இணையத்தை கலக்கி வருகின்றனர்.
மைக்கேல் ஜாக்சனுடன் தல அஜித் என்ற தலைப்பில் இணையத்தில் .. #வலிமை # தல #அஜித் போன்றவை ட்ரெண்டாகி வருகிறது.
நேர்கொண்ட பார்வை படத்துக்கு பிறகு மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு ‘வலிமை’ என்று பெயரிட்டுள்ளனர். போனிகபூர் தயாரிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகும் இதில், அஜித்குமார் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பைக் ரேஸ் மற்றும் கார் ரேஸ் காட்சிகளும் இப்படத்தில் இடம்பெறுகின்றன.
இப்படம் குறித்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அப்டேட்டும் வெளியிடப்பட வில்லை. இருப்பினும் வலிமை பட புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் லீக் ஆகி வருகின்றன. சமீபத்தில் அஜித் பைக் ஓட்டும் புகைப்படம் லீக் ஆகி வைரலானது குறிப்பிடத்தக்கது. போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா
இசையமைக்கிறார். ஹூமா குரேசி அஜித்துக்கு ஜோடியாக நடிக்க, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
தமிழ் திரையுலகில் நடிகர் அஜித் குமார் "தல", "அல்டிமேட் ஸ்டார்", "காதல் மன்னன்" என்ற பெயர்களில் ரசிகர்கள் மூலம் அழைக்கப்படுபவர் அஜித் குமார். தமிழில் ஒரு முன்னணி நடிகராகவும், சமுதாயத்தில் ஒரு நல்ல குடிமகனாகவும், உலகளவில் பிரபலமான ஒரு எஃப் 1 ரேஸராகவும் (F1 Racer) புகழ் பெற்றவர் நம்ம தல அஜித்.
அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஒரு ஆசிரியராகவும், உலகளவில் பல போட்டிகளில் பங்குபெற்ற ஒரு எஃப் 1 ரேஸர் (F1 Racer) மற்றும் 2018ம் ஆண்டு தமிழக மாநில அளவு துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கு பெற்று புகழ் பெற்றுள்ளார். ரசிகர்கள் மத்தியில் அவரது மாஸ் ஒருபோதும் குறையவில்லை.
மைக்கேல் ஜாக்சனுடன் தல அஜித் என்ற தலைப்பில் இணையத்தில் .. #வலிமை # தல #அஜித் போன்றவை ட்ரெண்டாகி வருகிறது.
THALA AJITH with Michael Jackson ..😍#Valimai#thala #Ajith pic.twitter.com/MkNY8TGJB8
— தல அருண் அஜித்தியன் (@AKRowdy4) January 18, 2021