• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • OTT Release: ஓடிடியில் வெளியாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் 'திட்டம் இரண்டு' திரைப்படம்..

OTT Release: ஓடிடியில் வெளியாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் 'திட்டம் இரண்டு' திரைப்படம்..

ஐஸ்வர்யா ராஜேஷ்

ஐஸ்வர்யா ராஜேஷ்

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் தயாராகியிருக்கும் படங்களில் முதலில் திட்டம் இரண்டு வெளியாகிறது. இதனை பிரபல ஓடிடி தளமான சோனிலிவ் வெளியிடுகிறது.

  • Share this:
    ஜகமே தந்திரம், சார்பட்டா பரம்பரை போன்ற முன்னணி நட்சத்திரங்களின் படங்களே ஓடிடியில் வெளியாகின்றன. திரையரங்குகள் திறப்பதில் ஏற்பட்ட தாமதம் ஒரு காரணம் என்றால், திரையரங்குகள் திறந்தாலும் ரசிகர்கள் படம் பார்க்க வருவார்களா என்ற சந்தேகம் இன்னொரு காரணம். சின்ன பட்ஜெட் மற்றும் நாயகி மையப் படங்கள் குறித்து சொல்லத் தேவையில்லை. ஓடிடியில் வெளியானால் மட்டுமே பணம் பார்க்க முடியும்.

    சமீபத்தில் தமிழ்ப் படங்களை வெளியிட ஆரம்பித்த சோனிலிவ் ஓடிடி தளம் ஜஸ்வர்யா ராஜேஷின் திட்டம் இரண்டு படத்தை வாங்கியுள்ளது. இவர்கள் முதலில் தேன் படத்தை வெளியிட்டனர். பிறகு சிவகார்த்திகேயன் தயாரித்த வாழ் திரைப்படத்தை வெளியிட்டனர். கார்த்திக் நரேன் மற்றும் மணிகண்டனின் நரகாசூரன், கடைசி விவசாயி படங்களையும் இவர்கள் வாங்கியுள்ளனர். இதில் நரகாசூரன் அடுத்த மாதம் 13 வெளியாகிறது.

    Photos : நடிகை கயல் ஆனந்தியின் பிறந்தநாள் இன்று - லவ்லி போட்டோஸ்

    இந்நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷின் திட்டம் இரண்டு த்ரில்லர் படத்தை இந்த மாதம் 30 ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர். விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ள திட்டம் இரண்டை மினி ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. சதீஷ் ரகுநந்தன் இசையமைக்க, கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்துள்ளார்



    திட்டம் இரண்டு தவிர மூன்று தெலுங்குப் படங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். தமிழில் தி கிரேட் இன்டியன் கிச்சன் ரீமேக், பூமிகா, டிரைவர் ஜமுனா, மோகன்தாஸ், துருவநட்சத்திரம், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: