Home /News /entertainment /

மாஸ்டர் அவதாரமெடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்... கல் தோசை கேட்ட பிரபல நடிகை!

மாஸ்டர் அவதாரமெடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்... கல் தோசை கேட்ட பிரபல நடிகை!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

படப்பிடிப்பு தளத்தில் தோசை சுடும் முயற்சியில் இறங்கியுள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

தமிழில் நல்ல கதையம்சங்களைக் கொண்ட படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருவதன் மூலம் தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவரது நடிப்பில் வானம் கொட்டட்டும், வேர்ல்டு பேமஸ் லவ்வர் ஆகிய படங்கள் சமீபத்தில் வெளியாகின.

இந்நிலையில் அடுத்த படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், படப்பிடிப்பு தளத்தில் ஓய்வு நேரத்தில் தோசை சுடும் முயற்சியில் இறங்கியுள்ளார். அதை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில் மலைப்பகுதியில் நடைபெற்று வரும் படப்பிடிப்பின் போது தனக்குத் தெரிந்த பாணியில் தோசை முட்டை சுட்டு அசத்தியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். அப்போது அவருக்கு குடை பிடித்து ஒருவர் அருகில் நிற்க பலரும் தோசை சுடுவதற்கான ஆலோசனைகளையும் வழங்குகின்றனர்.

இறுதியாக தோசையை திருப்பிப் போட்டு முடித்த ஐஸ்வர்யா மகிழ்ச்சியடைந்து, இந்த தோசையை சாப்பிடப்போவது யார் என்று ஆச்சர்யத்துடன் கேட்கிறார். இந்த வீடியோவுடன் கருத்து பதிவிட்டிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், “இப்படி எனக்கு குடை பிடித்திருப்பது, நான் கூலிங் கிளாஸ் அணிந்திருப்பது திட்டமிடப்பட்டது அல்ல. அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்” என்றும் கூறியுள்ளார்.



இதனிடைய இந்த வீடியோவைப் பார்த்த பலரும் எனக்கும் ஒருதோசை, ஆம்லெட் என்று பலவித உணவுகளைக் கேட்க நடிகை காயத்ரி, மாஸ்டர் எனக்கு ஒரு கல்தோசை, ஃபுல்பாயில் என்று கேட்டு கமெண்ட் பதிவிட்டுள்ளார். தனக்குத் தெரிந்தவர்கள் பதிவிடும் பல ஜாலியான கமெண்டுகளுக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பதிலளித்து வருகிறார்.

மேலும் படிக்க: கதை பிடிக்கவில்லையா... எவ்வளவு பணம் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன்... ஓடி விடுவேன் - கவுதம் மேனன் பரபரப்பு பேச்சு!

 
Published by:Sheik Hanifah
First published:

Tags: Aiswarya Rajesh

அடுத்த செய்தி