பிக்பாஸ் ஐஸ்வர்யாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிம்பு

நடிகர் சிம்பு அவரது நெருங்கிய நண்பர்களுடன் பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யாவின் பிறந்த நாளில் கலந்து கொண்டு அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

பிக்பாஸ் ஐஸ்வர்யாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிம்பு
நடிகை ஐஸ்வர்யா
  • News18
  • Last Updated: November 4, 2018, 1:14 PM IST
  • Share this:
நடிகர் சிம்பு அவரது நெருங்கிய நண்பர்களுடன் பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யாவின் பிறந்த நாளில் கலந்து கொண்டு அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

நடந்து முடிந்த பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் மஹத், ஜனனி, ரித்விகா, ஐஸ்வர்யா உள்ளிட்ட 16 போட்டியாளர்கள் பங்கு பெற்றனர். இதில் ரித்விகா வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும் நடிகை ஐஸ்வர்யா பிக்பாஸ் வீட்டை பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் பார்த்துக் கொண்டார். பிக்பாஸ் வீட்டில் அவரது நடவடிக்கைகள் விமர்சிக்கப்பட்டபோதும் நிகழ்ச்சியின் இறுதிக்கட்டம் வரை சென்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் நடிகை யாஷிகாவும் , ஐஸ்வர்யாவும் பிரிக்க முடியாத நண்பர்களானார்கள்.

இந்நிலையில் நிகழ்ச்சி முடிந்த பின்பு அவருக்கான பட வாய்ப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஆனால் நடிகர் சிம்பு நடிக்க இருக்கும் அடுத்த படத்தில் அவருக்கு வாய்ப்பளிக்க இருப்பதாக நடிகர் சென்ராயன் கூறியிருந்தார். சமீபத்தில் தனது பிறந்தநாளை நடிகர் சிம்பு, அனிருத், மஹத் ஆகியோருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதேபோல் யாஷிகா ஆனந்த் தனது முத்தத்தை ஐஸ்வர்யாவுக்கு பரிசளித்துள்ளார்.




சிம்புவின் அடுத்த படத்தில் ஐஸ்வர்யாதான் நாயகி என்று கூறப்பட்ட நிலையில் தற்போது ஐஸ்வர்யாவின் பிறந்தநாளில் சிம்பு கலந்து கொண்டிருப்பது அதனை உறுதி செய்வது போல் தெரிகிறது.

First published: November 4, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...