• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • எதிர்பார்ப்பை கூட்டியுள்ள நயன்தாரா - அறிக்கை வெளியிட்ட ஏஜிஎஸ்

எதிர்பார்ப்பை கூட்டியுள்ள நயன்தாரா - அறிக்கை வெளியிட்ட ஏஜிஎஸ்

நயன்தாரா

நயன்தாரா

நடிகை நயன்தாராவின் வரவு, "தளபதி 63" படத்திற்கான எதிர்பார்ப்பை மென்மேலும் கூட்டியுள்ளது என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    நடிகை நயன்தாராவின் வரவு, "தளபதி 63" படத்திற்கான எதிர்பார்ப்பை மென்மேலும் கூட்டியுள்ளது என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.

    சர்கார் படத்தை அடுத்து விஜய், இயக்குநர் அட்லியுடன் 3 -வது முறையாக கூட்டணி அமைத்திருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி படத்தின் ஆரம்பகட்டப் பணிகள் தொடங்கபட்டுள்ளன. இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். அதேபோல் சிம்டாங்காரன் பாடலாசிரியர் விவேக்கும் இடம்பெற்றுள்ளார். மெர்சல் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த ஜி.கே.விஷ்ணு இந்தப் படத்துக்கும் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் இந்தப் படம் 2019-ம் ஆண்டின் தீபாவளிக்கு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தப் படத்தில் நடிகர் விவேக் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் நடிகையின் பெயரை இதுவரை வெளியிடாமல் இருந்த படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.



    இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வில்லு படத்திற்கு பிறகு விஜயுடன் நடிகை நயன்தாரா "தளபதி 63" படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார். அதேபோல் அட்லீ இயக்கத்தில் வெளியான ராஜா ராணி படத்துக்கு பிறகு நயன்தாரா நடிக்கவுள்ளார்.

    படக்குழு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பல உச்ச பிரபலங்கள் பணியாற்றும் இப்படத்தில் நடிகை நயன்தாராவின் வரவு, "தளபதி 63" படத்திற்கான எதிர்பார்ப்பை மென்மேலும் கூட்டியுள்ளது.” என்று கூறப்பட்டுள்ளது.

    மேலும் படக்குழு குறித்த விவரத்தையும் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்:

    தயாரிப்பு - கல்பாத்தி S. அகோரம், கல்பாத்தி S.கணேஷ், கல்பாத்தி S.சுரேஷ் (ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட்)

    கதை, திரைக்கதை வசனம் இயக்கம் - அட்லி

    இசை - ஏ.ஆர்.ரஹ்மான்

    கிரியேட்டிவ் தயாரிப்பாளர் - அர்ச்சனா கல்பாத்தி

    ஒளிப்பதிவு - G.K.விஷ்ணு

    படத்தொகுப்பு - ரூபண் L.ஆண்டனி

    கலை - T. முத்துராஜ்

    சண்டைப்பயிற்சி - அனல் அரசு

    பாடல்கள் - விவேக்

    நிர்வாக தயாரிப்பு - S.M.வெங்கட் மாணிக்கம்.

    தெலங்கானா தேர்தல் பிரசாரத்தில் போலீசார் குத்தாட்டம் - வீடியோ

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: