ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அஜித் படத்தை தயாரிக்க பேச்சுவார்த்தை நடந்ததா? அர்ச்சனா கல்பாத்தி விளக்கம்

அஜித் படத்தை தயாரிக்க பேச்சுவார்த்தை நடந்ததா? அர்ச்சனா கல்பாத்தி விளக்கம்

அஜித் | அர்ச்சனா கல்பாத்தி

அஜித் | அர்ச்சனா கல்பாத்தி

அஜித்தின் 61-வது படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில் இதுகுறித்து அர்ச்சனா கல்பாத்தி விளக்கமளித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை அடுத்து மீண்டும் அதே கூட்டணியுடன் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார் அஜித். அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு 50% நிறைவடைந்துள்ளது. கொரோனா பிரச்னை முடிந்த பின்னர் மீதமிருக்கும் காட்சிகளுக்கான படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.

  இந்நிலையில் இந்தப் படத்தை அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் அஜித் நடிக்க இருப்பதாகவும், ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து விளக்கமளித்திருக்கும் ஏஜிஎஸ் நிறுவனத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, “நாங்கள் 2020-ம் ஆண்டுக்கான எந்த ஒரு திரைப்பட தயாரிப்பு திட்டத்திலும் கையெழுத்திடவில்லை. சில தவறான செய்திகள் வலம் வருகின்றன. அதனால் ஏஜிஎஸ் நிறுவனம் சார்பாக நான் விளக்கமளித்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

  மேலும் தனது மற்றொரு ட்விட்டர் பதிவில், புதிய திரைப்படம் தயாரிப்பது தொடர்பாக இதுவரை நாங்கள் யாரையும் சந்திக்கவில்லை என்றும், காத்திருப்பதாகவும் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.

  ஏஜிஎஸ் நிறுவனம் கடந்த ஆண்டு வெளியான விஜய்யின் ‘பிகில்’ படத்தை பிரமாண்டமாக தயாரித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

  Published by:Sheik Hanifah
  First published:

  Tags: Actor Ajith, Archana Kalpathi, Kollywood