• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • வனிதா, நிஷாவையடுத்து புதிய திரைப்படத்தில் இணைந்த மேலும் ஒரு பிக்பாஸ் பிரபலம்.!

வனிதா, நிஷாவையடுத்து புதிய திரைப்படத்தில் இணைந்த மேலும் ஒரு பிக்பாஸ் பிரபலம்.!

பிக் பாஸ் சீசன் 5

பிக் பாஸ் சீசன் 5

வசந்தபாலனின் புதிய திரைப்படத்தில் மற்றொமொரு பிக்பாஸ் பிரபலம் இணைந்துள்ளார்.

  • Share this:
சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவர் தமிழ் நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா விஜயகுமார். இவர் ஒன்றிரண்டு திரைப்படங்களில் நடித்திருந்தாலும் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகள் மற்றும் குடும்பத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை பொதுவெளியில் மீடியா முன் கொண்டு வந்து நடத்தி தன் மீதான சர்ச்சை பிம்பத்தை முதன் முதலில் ஏற்படுத்தினார். பின்னர் அடுத்தடுத்த திருமணங்கள், அவ்வப்போது ஏற்பட்ட குடும்ப தகராறுகள் காரணமாகவே தமிழ் மக்கள் மத்தியில் அடிக்கடி பேசுபொருளாகி இருந்தார் நடிகை வனிதா விஜயகுமார்.

பின்னர் விஜய் டிவியின் பிக்பாஸ் தமிழ் சீசன் 3 ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றதன் மூலம் தமிழகம் முழுவதும் மிகவும் பிரபலமடைந்தார் வனிதா விஜயகுமார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பல்வேறு டிவி நிகழ்ச்சி வாய்ப்புகள் மற்றும் திரைப்பட வாய்ப்புகள் வனிதா விஜயகுமாருக்கு வரிசை கட்டின. காமெடி நடிகர் பவர் ஸ்டாருடன் பிக்அப் ட்ராப் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நடிகை வனிதா, அடுத்ததாக விரைவில் திரைக்கு வர உள்ள கிரைம் த்ரில்லர் படமான அந்தகனிலும் நடித்து இருக்கிறார். இதனை தொடர்ந்து டைரக்டர் வசந்தபாலன் இயக்கத்தில் இன்னும் தலைப்பு வைக்கப்படாத திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி ஷூட்டிங் சென்று கொண்டிருக்கிறது.

இதே போல ஸ்டார் விஜய் டிவி-யில் ஒளிபரப்பான பிக்பாஸ் தமிழ் சீசன் 4-ல் பங்கேற்ற காமெடி நடிகையான அறந்தாங்கி நிஷாவும் வசந்தபாலனின் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தில் நடிக்கிறார். தமிழ் வெள்ளித்திரையில் முன்னணி இயக்குநராக இருக்கும் வசந்தபாலன் ஹீரோவாக நடிகர் அர்ஜுன் தாஸ் , ஹீரோயினாக நடிகை துஷாரா விஜயனை வைத்து இந்த திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இதனிடையே வசந்தபாலனின் இந்த புதியதிரைப்படத்தில் மற்றொமொரு பிக்பாஸ் பிரபலம் இணைந்துள்ளார். பிக்பாஸ் பங்கேற்பாளர்கள் மற்றும் ரசிகர்களால் தாத்தா என்று அன்போடு அழைக்கப்பட்டு வரும் நடிகர், இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் உணவக உரிமையாளர் என பன்முக திறமை வாய்ந்த சுரேஷ் சக்கரவர்த்தி வசந்தபாலனின் புதிய படத்தில் நடிக்க உள்ளார். ஏற்கனவே விஷால் நடித்து வரும் ’துப்பறிவாளன் 2’-வில் நடித்து வரும் சுரேஷ் சக்ரவர்த்தி தற்போது வசந்தபாலன் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.



கடந்த பிப்ரவரி மாதமே துவங்கிய இபபடத்தின் ஷூட்டிங் கொரோனா இரண்டாம் அலை காரணமாக பாதியில் நிறுத்தபட்டிருந்தது. இந்நிலையில் தற்போது முழுவீச்சில் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.

ALSO READ |  ஓடிடி வெளியீட்டிலிருந்து பின்வாங்கும் விஜய் சேதுபதி படம்

இந்நிலையில் தான் வசந்தபாலன் டைரக்ட் செய்து வரும் திரைப்படத்தை தயாரித்து வரும் நிறுவனம்,மேற்காணும் புதிய அப்டேட்டை சமீபத்தில் அறிவித்துள்ளது. இது குறித்து ட்விட்டரில் தகவலை பகிர்ந்துள்ள Urban Boyz Studio நிறுவனம் நடிகர் சுரேஷ் சக்ரவர்த்தியை தவிர, தயாரிப்பாளரும் நடிகருமான ஜேஎஸ்கே சதீஷ்குமார், ஷா ரா ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

 



 

வசந்தபபாலன் இயக்கத்தில் தயாராகி வரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் இறுதி கட்டத்தை எட்டி விடும் என கூறப்படுகிறது. எனவே எஞ்சிய ஷூட்டிங்கும் நிறைவுற்று விரைவில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று ரசிகர்கள் எதிர்பாக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: