முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / கேஜிஎஃப் இயக்குனர் படத்தில் நடிக்கும் ஜுனியர் என்டிஆர்...!

கேஜிஎஃப் இயக்குனர் படத்தில் நடிக்கும் ஜுனியர் என்டிஆர்...!

ஜூனியர் என்டிஆர்

ஜூனியர் என்டிஆர்

கேஜிஎஃப் சேப்டர் 2 படத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கும் அதேநேரம், பிரசாந்த் நீல் அடுத்து யாரை வைத்து படம் இயக்கப் போகிறார் என திரையுலகினர் கண்ணில் எண்ணைய் வைத்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

2018 இல் வெளியான கன்னடப் படம் கேஜிஎஃப் சேப்டர் 1 இந்திய அளவில் கலக்கியது. பாகுபலிக்கு பிறகு தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டான படம் என்ற பெருமை இதற்கு கிடைத்தது. சொல்ல வேண்டியதில்லை. கன்னடப்பட சரித்திரத்தில் அதிக வசூல் இந்தப் படத்துக்கே. கேஜிஎஃப் சேப்டர் 2 க்காக அனைவரும் காத்திருக்கிறார்கள்.

மேலே உள்ள அனைத்து சாதனைக்கும் காரணகர்த்தா இயக்குனர் பிரசாந்த் நீல். பன்ச் டயலாக்கை வைத்தே ஒரு படத்தை எடுக்க முடியும் என்று நிரூபித்தவர். இரண்டரை மணிநேரத்தில் இந்திய அரசியலையும், மாஃபியா பலத்தையும், தங்கத்துக்கு பின்னிருக்கும் அரசியலையும் பெரிய கேன்வாஸில் காட்டியது சாதாரணமில்லை

கேஜிஎஃப் சேப்டர் 2 படத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கும் அதேநேரம், பிரசாந்த் நீல் அடுத்து யாரை வைத்து படம் இயக்கப் போகிறார் என திரையுலகினர் கண்ணில் எண்ணைய் வைத்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பலரது பெயர்கள் அடிபட்ட நிலையில், தற்போது அவர் ஜுனியர் என்டிஆரை இயக்குவது உறுதியாகியுள்ளது. இதனை ஜுனியர் என்டிஆரோ தெரிவித்துள்ளார்.

ராஜமௌலி இயக்கத்தில் நடித்துவரும் ஆர்ஆர்ஆர் முடிந்ததும் கொரட்டல சிவா இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர் நடிக்கிறார். இதற்குமுன் இவர்கள் இணைந்த ஜனதா கரேஜ் திரைப்படம் ஹிட்டானது. மோகன்லால் இதில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இரண்டாவது முறையாக ஜுனியர் என்டிஆர், கொரட்டல சிவா இணைகிறார்கள். இந்தப் படத்தைத் தொடர்ந்து பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிப்பதாக ஜுனியர் என்டிஆர் கூறியுள்ளார்.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: Junior NTR