லாக்டவுனிற்கு பிறகு முதல் ஆன்மிக பயணம் - டிடி உற்சாகப் பதிவு

லாக்டவுனிற்கு பிறகு முதல் ஆன்மிக பயணம் - டிடி உற்சாகப் பதிவு

திவ்யதர்ஷினி

பிரபல தொகுப்பாளினியான டிடி லாக்டவுனிற்கு பிறகு முதன் முதலில் வேளாங்கண்ணி ஆலயத்திற்கு சென்றுள்ளார்.

 • Share this:
  விஜய் தொலைக்காட்சியில் 20 வருடங்களுக்கும் மேலாக தொகுப்பாளினியாக இருந்து வருவபவர் திவ்யதர்ஷினி. இவர் செல்லமாக டிடி என அழைக்கபடுவார்.காஃபி வித் டிடி என்ற நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் அசைக்கமுடியாத இடத்தை பிடித்தார்.

  டிடி சின்னத்திரை மட்டுமல்லாமல் திரைப்படம், ஆல்பம் சாங் என அனைத்திலும் கலக்குபவர்.2003 ஆம் ஆண்டு விசில் படத்தில் தொடங்கி பவர் பாண்டி, சர்வம் தாள மயம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் உருவாகும் ’ரொமாண்டிக்’ என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் போஸ்ட் புரக்டஷன் வேலைகள் நடைபெற்றுவருகிறது. அதுமட்டுமில்லாமல் கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகும் துருவ நட்சத்திரம் படத்திலும் நடித்து வருகிறார்.

  2018 ஆம் ஆண்டு கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான ‘உலாவிரவு’ என்ற ஆல்பம் சாங்கில் நடித்து பாராட்டை பெற்றார். சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் டிடியும் ஒருவர். இந்நிலையில் லாக்டவுனிற்கு பிறகு வேளாங்கண்ணி சென்று அந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில் ’லாக்டவுனிற்கு பிறகு சென்ற முதல் ஆன்மிக பயணம். வேளாங்கண்ணி அமைதியை தந்தது’ எனக் கூறியுள்ளார்.
  Published by:Tamilmalar Natarajan
  First published:

  சிறந்த கதைகள்