• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • "கிரிக்கெட்டில் இவரு என் ஹீரோ" : நடிகை ராஷ்மிகா மந்தனாவின் மனம் கவர்ந்த சிஎஸ்கே நாயகன்!

"கிரிக்கெட்டில் இவரு என் ஹீரோ" : நடிகை ராஷ்மிகா மந்தனாவின் மனம் கவர்ந்த சிஎஸ்கே நாயகன்!

நடிகை ராஷ்மிகா மந்தனா

நடிகை ராஷ்மிகா மந்தனா

ஐ.பி.எல் போட்டியில் பெங்களுரு அணிக்கு ஆதரவு தெரிவித்திருந்ததாலும், கிரிக்கெட் தொடர்பான கேள்விகளையும் ரசிகர்கள் ராஷ்மிகாவிடம் கேட்டனர்.

  • Share this:
மகேந்திர சிங் தோனிக்கு, மிகப்பெரிய ரசிகை என நடிகை ராஷ்மிகா மந்தனா கூறியுள்ளார்.

கன்னட நடிகையான ராஷ்மிகா மந்தனா 'கிரிக்பார்டி, படத்தின் மூலம் புகழ் பெற்றார். சிறப்பான நடிப்பு மற்றும் கியூட்டான சிரிப்பால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற அவர், சோஷியல் மீடியாக்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருக்கிறார். கிரிக்கெட் மீது தீராத ஆர்வம் கொண்ட அவர் அண்மையில் நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில், விராட் கோலி தலைமையிலான பெங்களூரூ ராயல்சேலஞ்சர்ஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்தார்.

தன்னுடயை அனைத்து பதிவுகளிலும் ராயல்சேலஞ்சர்ஸ் அணியையும், வீரர்களின் விளையாட்டையும் புகழ்ந்து தள்ளி, கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார். இந்த முறை ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கே 'ஐ.பி.எல் கோப்பை' எனக் கூறி ஐ.பி.எல் கிரிக்கெட் ரசிகர்கள் வட்டாரத்தில் புயலைக் கிளப்பினார். அவருடைய ஒவ்வொரு பதிவையும் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். அண்மையில் திடீரென இன்ஸ்டாகிராம் லைவில் வந்த ராஷ்மிகா மந்தனா, ரசிகர்களின் கேள்விக்கு வெளிப்படையாக பதில் அளித்தார்.

அவர் கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்டிருப்பதாலும், ஐ.பி.எல் போட்டியில் பெங்களுரு அணிக்கு ஆதரவு தெரிவித்திருந்ததாலும், கிரிக்கெட் தொடர்பான கேள்விகளையும் ரசிகர்கள் ராஷ்மிகாவிடம் கேட்டனர். அப்போது, கிரிக்கெட்டில் யார் உங்களுக்கு மிகவும் பிடிக்கும்? என ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ராஷ்மிகா, மகேந்திரசிங் தோனி என்றார். கிரிக்கெட் மைதானத்தில் தோனியின் அணுகுமுறை, பேட்டிங், கேப்டன்சி என அனைத்தையும் தான் ரசிப்பதாகவும், கிரிக்கெட்டுக்கு தேவையான 100 விழுக்காட்டையும் அவர் கொடுப்பதாக புகழ்ந்து தள்ளினார்.

மேலும், தோனியில் மிகத் தீவிர ரசிகை என்றும் ராஷ்மிகா தெரிவித்தார்.

ராஷ்மிகாவின் இந்த பதில் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால், ஐ.பி.எல் போட்டியில் பெங்களூரு அணிக்கு ஆதரவை தெரிவித்திருந்ததால், கோலியை பிடிக்கும் என அவர் கூறுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், தோனியை பிடிக்கும் என கூறியதும், ரசிகர்களின் எதிர்பார்ப்பு பொய்யானது. 25 வயதான ராஷ்மிகா, தெலுங்கில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் விஜய் தேவரகொண்டாவுடன் 'கீத கோவிந்தம்' படத்தில் நடித்திருந்தார்.

Read More:  ஒற்றை ட்வீட்டால் ஏற்பட்ட சங்கடம்: அரவிந்த் கெஜ்ரிவால் கருத்தால் கொந்தளித்த சிங்கப்பூர் அரசு!

மீண்டும் 'டியர் காமரேட்' படத்தில் அவருடன் ஜோடி சேர்ந்துள்ளார். இந்தப் படம் இப்போது உருவாகி வருகிறது. விரித்திரா, தேவதாஸ் உள்ளிட்ட படங்களிலும் ராஷ்மிகா நடித்து வருகிறார். சலோ, சமக், அஞ்சனி புத்திரா ஆகிய படங்களிலும் கதாநாயகியாக அவர் நடித்திருத்தார். சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவதால், அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. விரைவில் தமிழ் திரைபடத் துறையிலும் கால் பதிப்பார் என கூறப்படும் நிலையில், அவரின் வருகையை தமிழ் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: