பிக் பாஸில் இருந்து வெளியேறிய பின் முதல் வேலையாக தனது கவர்ச்சியான படங்களை இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கியுள்ளார் ஷிவானி நாராயணன்.
விஜய் டிவி மற்றும் ஜீ தமிழில் ஒளிபரப்பான சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஷிவானி நாராயணன். இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இருக்கும் அவர் தினமும் மாலை 4 மணிக்கு ‘டாங்கென’ தனது புகைப்படம் ஒன்றை தவறாமல் அப்லோட் செய்வதை வழக்கமாக வைத்திருந்தார். இதற்கு அவரின் 2.5 மில்லியன் ஃபாலோயர்களே சாட்சி. அதுவும் கொரோனா லாக்டவுன் காலத்தில் விதவிதமான படங்களால் இன்ஸ்டாகிராமை அலங்கரித்து வந்தார் ஷிவானி.
பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளராக சென்ற ஷிவானி மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவரோ, அமைதியாக தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்ததால், ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இதற்கிடையே அவரின் அம்மா பிக் பாஸ் இல்லத்துக்கு வந்து சென்றதும், ஷிவானிக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதன் பிறகான நாட்களில், தனது கருத்தை சரியாக பதிவிட்டு, டாஸ்க்குகளில் சிறப்பாக செயல்பட்டார். குறிப்பாக ‘டிக்கெட் டூ ஃபினாலே’ டாஸ்க்கில் ஷிவானியின் பங்கு ரசிகர்களை பெரிதும் ஈர்த்தது.
இதற்கிடையே பிக் பாஸில் இருந்து எவிக்ட் ஆகி, வெளியில் வந்த ஷிவானி வழக்கம் போல் தனது படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவார் என ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு இருந்தனர். ஆனால் உண்மையில் நடந்தது என்னவென்றால், அவர் ஏற்கனவே பதிவிட்டிருந்த தனது கவர்ச்சியான படங்களை இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கியுள்ளார். அதோடு புதிய பதிவுகள் எதுவும் இதுவரை போடவில்லை. இப்படியான ஷிவானியின் மாற்றத்திற்கு என்ன காரணம் என்பதை தெரிந்துக் கொள்ள ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்