Home » News » Entertainment » AFTER BIGG BOSS TAMIL 4 RIO RAJ SHARE HIS VIDEO MSB

பிக்பாஸ்க்கு பின் ரியோ வெளியிட்ட முதல் வீடியோ பதிவு

பிக்பாஸ் சீசன் 4 தனக்கு அழகான பயணமாக இருந்ததாக ரியோ தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ்க்கு பின் ரியோ வெளியிட்ட முதல் வீடியோ பதிவு
ரியோ ராஜ்
  • Share this:
தமிழில் 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 4-ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ஜனவரி 17-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது. 18 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் அதிக வாக்குகளைப் பெற்று நடிகர் ஆரி வெற்றியடைந்தார். அவரைத் தொடர்ந்து பாலாஜி முருகதாஸ் இரண்டாம் இடத்தையும், ரியோ மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

மூன்றாம் இடம்பிடித்த ரியோவுக்கு ‘பெஸ்ட் எண்டர்டெய்னர்’ விருது கொடுத்து அனுப்பினார் கமல்ஹாசன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்தே அர்ச்சனா, நிஷா, கேபி உள்ளிட்டோரிடம் நட்பு பாராட்டி வந்த ரியோ அன்பு கேங்கின் உறுப்பினராகவே பார்வையாளர்களால் பார்க்கப்பட்டார். அதேபோல் மற்ற போட்டியாளர்களிடம் அதிகம் கோபத்தை வெளிப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்ற உறுதியுடன் அவர் பிக்பாஸ் வீட்டில் இருப்பதாகவும் சில போட்டியாளர்கள் தெரிவித்தனர்.

பிக்பாஸ் தமிழ் 4-வது சீசனில் இறுதிவரை களம் கண்ட ரியோ வெற்றி பெறாதது அவரது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தினாலும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் இணைந்து சிறப்பான வரவேற்பு அளித்துள்ளனர்.


பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து திரும்பிய ரியோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “எல்லாரும் நலமாக இருக்கிறீர்களா? நான் இப்போது நலமாக இருக்கிறேன். பிக்பாஸ் சீசன் 4 எனக்கு ஒரு அழகான நல்ல பயணமாக இருந்தது. அதை நான் வெளியில் வந்து பார்த்த போது தெரிந்து கொண்டேன்.

 




View this post on Instagram





 

A post shared by Rio Raj (@rio.raj)






நீங்கள் எனக்கு கொடுத்த ஆதரவு மற்றும் அன்பை வெளியில் வந்து பார்த்த போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இனி நிறைய வேலை இருக்கிறது. அவற்றை திட்டமிட்டு பண்ணலாம். இப்போதைக்கு இவ்வளவு அன்பு, நேர்மறை எண்ணங்களைக் கொடுத்த உங்கள் அனைவருக்கும் நன்றி” என்று கூறியுள்ளார்.
First published: January 21, 2021
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories