பிக்பாஸ்க்கு பின் விஜய் டிவியில் அர்ச்சனாவுக்கு கிடைத்த வாய்ப்பு

அர்ச்சனா

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் விஜய் டிவி சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க இருக்கிறார் அர்ச்சனா.

  • Share this:
முன்னணி தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வலம் வந்த அர்ச்சனா பிக்பாஸ் 4-வது சீசனில் வைல்ட் கார்ட் போட்டியாளராக கலந்து கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே ஒரு சில சின்னத்திரை தொடர்களில் சிறப்பு தோற்றங்களில் நடித்த அர்ச்சனா, சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

75 நாட்களுக்கும் அதிகமாக பிக்பாஸ் வீட்டில் தங்கியிருந்த அர்ச்சனா ரியோ, அறந்தாங்கி நிஷா, கேபி, சோம் ஆகிய நால்வருடன் அன்புக் கூட்டணி அமைத்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து 9-வது போட்டியாளராக நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் விஜய் டிவியில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கும் வாய்ப்பு அர்ச்சனாவுக்கு கிடைத்திருக்கிறது. பிப்ரவரி 14-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு காதலர் தின சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்ப தயாராக உள்ளது. நடனம், இசை மற்றும் காதல் ஆகியவற்றுடன் நட்சத்திரங்கள் அவர்களது வாழ்க்கைத் துணையுடன் ஒரு நிகழ்ச்சியை வழங்கவுள்ளார். இதில் நிஜ ஜோடிகள் மற்றும் திரையில் பார்த்து ரசித்த ஜோடிகள் பங்கேற்கின்றனர்.

மேலும் படிக்க: கெட்ட வார்த்தைகளை பயன்படுத்த வேணாம் ப்ளீஸ்... அர்ச்சனாவின் மகள் உருக்கமான வேண்டுகோள்

‘காதலே காதலே’ நிகழ்ச்சி முற்றிலும் காதலர் தினத்திற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட பிரம்மாண்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகும். காதலுடன் நடனம் இசை மற்றும் புரிதல் போன்ற அணைத்து சிறப்பு பங்களிப்பும் இந்த ஜோடிகள் வழங்க இருக்கின்றனர்.

இந்த காதல் நிகழ்ச்சியில் பங்கேற்க நிஜ வாழ்வில் தம்பதியர்களான சித்து - ஸ்ரேயா, சஞ்சீவ் - மானசா, வினோத் - சிந்து, மணிமேகலை - உசேன், நிஷா - ரியாஸ், தங்கதுரை - அருணா, ரேஷ்மா - மதன் பங்கேற்கின்றனர்.

திரையில் ஜோடிகளாக நடிப்பவர்கள் ப்ரஜின் - ரேஷ்மா, பவித்ரா - திரவியம், நவீன் -நேஹா, தர்ஷா அசார் - புகழ், அருண் - ஃபரினா, பாலா - ரித்விகா ஆகியோர் பங்கேற்கின்றனர். மேலும் பிக் பாஸ் பிரபலம் அர்ச்சனா இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார்.
Published by:Sheik Hanifah
First published: