• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • இயக்குநரை வச்சி செஞ்ச ஐஸ்வர்யா... படப்பிடிப்பின் போது நடந்த சண்டையால் பரபரப்பு...!

இயக்குநரை வச்சி செஞ்ச ஐஸ்வர்யா... படப்பிடிப்பின் போது நடந்த சண்டையால் பரபரப்பு...!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா

'அலேகா' என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் 90 சதவிகித படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    நடிகை ஐஸ்வர்யா படப்பிடிப்பின் போது இயக்குநர் சொல்வதைக் கேட்காமல் அலட்சியமாக நடந்துகொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    நெடுஞ்சாலை படத்தில் ஹீரோவாக நடித்த ஆரியும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற நடிகை ஐஸ்வர்யா தத்தாவும் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமித்திரன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகின்றனர். கிரியேட்டிவ் டீம்ஸ் E.R.ஆனந்தன் மற்றும் க்ளோஸ்டார் கிரியேஷன் B. தர்மராஜ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்துக்கு தில்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். சத்யா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

    ‘அலேகா’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் 90 சதவிகித படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஐஸ்வர்யா படபிடிப்புக்கு இஷ்டத்துக்கு வருவதும், இயக்குநர் சொல்வதைக் கேட்டு நடிக்காமலும், இஷ்டத்துக்கு நடிப்பதும் என சேட்டைகள் செய்து வந்துள்ளார்.



    இன்று மேடவாக்கத்தில் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த போது ஐஸ்வர்யா வழக்கம்போல் தாமதமாக வந்துள்ளார். படத்தின் முக்கிய காட்சி படப்பிடிப்பின் போது இயக்குநர் சொல்வதை செய்யாததால், அவருக்கும் இயக்குநருக்கும் இடையே சண்டை வந்துள்ளது.

    தயாரிப்பாளருக்கும் முதல் படம் என்பதால் என்ன செய்வதென்று அறியாமல் உள்ளாராம். மேலும் நடிகை ஐஸ்வர்யாவின் இந்த செயலால் படக்குழு அதிருப்தியடைந்துள்ளது.

    வீடியோ பார்க்க: என்னை போல் டூப்பை வைத்து எடுத்த படம் அக்னிதேவி - நடிகர் பாபி சிம்ஹா பேட்டி

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: