Home /News /entertainment /

மனஸ்தாபமா?... 8 வருடத்துக்குப் பின்பு மீண்டும் `ஜெயில்’-ல் இணைந்த தனுஷ் - ஜி.வி.பிரகாஷ்

மனஸ்தாபமா?... 8 வருடத்துக்குப் பின்பு மீண்டும் `ஜெயில்’-ல் இணைந்த தனுஷ் - ஜி.வி.பிரகாஷ்

வசந்த பாலன், தனுஷ், ஜி.வி.பிரகாஷ்

வசந்த பாலன், தனுஷ், ஜி.வி.பிரகாஷ்

8 வருடங்களுக்கு பிறகு தனுஷ் - ஜி.வி.பிரகாஷ் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

  • News18
  • Last Updated :
    8 வருடங்களுக்கு பிறகு தனுஷ் - ஜி.வி.பிரகாஷ் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

    தன்னை வெயில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய இயக்குநர் வசந்த பாலன் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ். ஜெயில் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தில் அபர்ணதி, ஜெனிஃபர், மணிமேகலை, 'பாகுபலி' வில்லன் பிரபாகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    ஜெயில் படத்தின் ஒரு பாடலுக்காக காற்று வெளியிடை நாயகி அதிதி ராவை பாட வைத்தார் ஜி.வி.பிரகாஷ். தற்போது மற்றொரு பாடலுக்காக நடிகர் தனுஷை பாட வைத்துள்ளார்.

    முன்னதாக தனுஷ் நடிப்பில் வெளியான 'ஆடுகளம்', 'மயக்கம் என்ன' உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த ஜி.வி.பிரகாஷ், மயக்கம் என்ன படத்தின் போது ஏற்பட்ட மனஸ்தாபத்தில் இருவரும் இணைந்து பணியாற்றாமல் இருந்தனர். தற்போது மீண்டும் இருவரையும் ஜெயில் படத்தில் இணைத்து வைத்துள்ளார் படத்தின் இயக்குநர் வசந்தபாலன். தனுஷ், வசந்தபாலன் தன்னுடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டிருக்கும் ஜி.வி.பிரகாஷ் ஜெயில் படத்தில் பாடல் ஒன்றை தனுஷ் பாடி முடித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.



    இந்தப் புகைப்படத்தை பார்த்த பலரும் இணைந்த இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    சிம்பு : லிட்டில் சூப்பர் ஸ்டார் முதல் சர்ச்சைகளின் நாயகன் வரை - வீடியோ

    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: Dhanush, G.V.Prakash

    அடுத்த செய்தி