நேரடியாக விஜய் டிவியில் வெளியாகும் ஏலே திரைப்படம் - தயாரிப்பாளர்கள் அறிவிப்பு

நேரடியாக விஜய் டிவியில் வெளியாகும் ஏலே திரைப்படம் - தயாரிப்பாளர்கள் அறிவிப்பு

ஏலே பட போஸ்டர்

ஏலே திரைப்படத்தை நேரடியாக விஜய் டிவியில் ஒளிபரப்ப படக்குழு முடிவு செய்துள்ளது.

  • Share this:
சில்லு கருப்பட்டி படத்தை அடுத்து ஹலிதா சமீம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஏலே’. சமுத்திரக்கனி, மணிகண்டன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்தை ரிலையன்ஸ் நிறுவனம், ஒய் நாட் ஸ்டுடியோஸ் மற்றும் வால் வாட்சர் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.

பிப்ரவரி 12-ம் தேதி திரையரங்கில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தியேட்டரில் வெளியாகி 30 நாட்கள் கழித்துதான் ஓடிடி வெளியீடு என்ற கடிதம் கொடுக்குமாறு தயாரிப்பாளரிடம் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கேட்டது. அந்தக் கடித்தத்தைக் கொடுக்க தயாரிப்பு நிறுவனம் மறுத்திருந்தது.

இந்நிலையில் ஏலே படம் பிப்ரவரி 28-ம் தேதி நேரடியாக விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் என்று பத்தின் தயாரிப்பாளர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, “ ‘ஏலே’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக மூன்று நாட்களே இருந்த நிலையில் சில ஆச்சர்யகரமான புதுவிதிகளாலும், தவிர்க்க முடியாத சில காரணங்களாலும் படத்தை திரையரங்கிற்கு கொண்டு வர முடியாத நிலை உருவாகியுள்ளது. ஆகையால் திரையரங்குகளை தவிர்த்து எங்கள் படத்தினை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு எடுத்து செல்ல வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது.ஸ்டார் விஜய் தொலைக்காட்சியுடன் இணைந்து 2021 பிப்ரவரி 28-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 3 மணிக்கு உலக தொலைக்காட்சிகளில் முதல்முறையாக நேரடியாக இத்திரைப்படத்தினை வெளியிடுகிறோம்.

திறமையாளர்களுக்கு வாய்ப்புகளையும், ரசிகர்களுக்கு தரமான கதைகளையும் திரையரங்கு உட்பட அனைத்து தளங்களிலும் வழங்குவதில் எங்கள் நிறுவனம் எப்போதும் முனைப்புடன் செயல்படும்” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Sheik Hanifah
First published: