அதிமுகவினர் போராட்டத்தால் மதுரையில் சர்கார் காட்சி ரத்து!

Sarkar | சர்கார் படத்தில் அதிமுக அரசு வழங்கிய இலவச மிக்ஸி, கிரைண்டரை விமர்சிக்கும் வகையில் இருக்கும் காட்சிகள் ஆளுங்கட்சிக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Web Desk | news18
Updated: November 8, 2018, 5:16 PM IST
அதிமுகவினர் போராட்டத்தால் மதுரையில் சர்கார் காட்சி ரத்து!
சர்கார் - பட போஸ்டர்
Web Desk | news18
Updated: November 8, 2018, 5:16 PM IST
மதுரையில் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்துக்கு எதிராக அதிமுகவினர் போராட்டம் நடத்திய நிலையில், 3 தியேட்டர்களில் படத்தின் பிற்பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

விஜய் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சமீபத்தில் சர்ச்சைகளுடன் வெளியான சர்கார் படத்தில், அரசின் இலவச திட்டங்களை விமர்சித்து காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. அரசு வழங்கிய இலவச மிக்ஸி, கிரைண்டரை தீயில் எரிப்பது போல காட்சிகள் இருந்தது. இதனால், பரபரப்பு ஏற்பட்ட நிலையில், படத்துக்கு எதிராக பல அமைச்சர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

மதுரை அண்ணாநகரில் எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா தலைமையில், சர்கார் வெளியான் தியேட்டருக்கு எதிரே இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. 100-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதன் காரணமாக 3 திரையரங்குகளில் சர்கார் படத்தின் பிற்பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கோவையிலும் படத்துக்கு எதிராக அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். தியேட்டரில் வைக்கப்பட்டிருந்த பட பேனர்கள் கிழிக்கப்பட்டது. இதனால், பேனர்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை காசி தியேட்டரிலும் அதிமுகவினர் குவிந்து, படத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அங்கிருந்த பேனர்களையும் கிழித்தனர். இதனால், பரபரப்பான சூழல் நிலவியது.

Also See..

First published: November 8, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்