Kutty Story: விஜய் சேதுபதியுடன் ரொமான்ஸ் பண்ணும் போது அழுதுட்டேன் - அதிதி பாலன்

அதிதி பாலன் | விஜய் சேதுபதி

குட்டி ஸ்டோரி ஆந்தாலஜியில் விஜய் சேதுபதியுடனான ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கும் போது அழுதுவிட்டதாக நடிகை அதிதி பாலன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
கவுதம் மேனன், வெங்கட் பிரபு, நலன் குமாரசாமி, இயக்குநர் விஜய் ஆகியோர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஆந்தாலஜி குட்டி ஸ்டோரி. இந்தப் படம் நேற்று திரையரங்கில் வெளியானது. குட்டி ஸ்டோரி ஆந்தாலஜியில் நலன் குமாரசாமி இயக்கிய கதையில் விஜய் சேதுபதியும் அதிதி பாலனும் நடித்துள்ளனர்.

விஜய் சேதுபதியுடன் பணியாற்றியது குறித்து இணைய ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கும் அதிதி பாலன், “நான் சிறப்பான முறையில் நடித்திருப்பதாக இயக்குநர்கள் என்னிடம் சொன்னார்கள். ஊரடங்கில் தளர்வுகள் அறிவித்து படப்பிடிப்பு தொடங்கிய சமயத்தில் நலன் குமாரசாமி போன் செய்தார். அப்போது விஜய்சேதுபதிதான் இந்த கதையில் நடிப்பார் என உறுதியாக தெரியாது. ஆனால் வாய்ப்பிருக்கிறது என்று நலன் கூறினார். எனக்கு விஜய் சேதுபதியை மிகவும் பிடிக்கும். நலன் குமாரசாமி - விஜய் சேதுபதி கூட்டணி பிடித்திருந்தது. ஸ்கிரிப்ட் கேட்டேன். அப்படித்தான் நடந்தது.

அருவி படத்துக்குப் பின் இடைவெளி இருந்ததற்கு காரணம் எனக்கு பிடித்த கதைகள் அமையவில்லை. அதேநேரம் எனக்கு வந்த கதைகள் சில பிடிக்கவில்லை. காரணம் பெண்களை மையப்படுத்திய கதைகளே அதிகம் வந்தன. அருவி படத்திலிருந்து கொஞ்சம் வித்தியாசமாக நடிக்க வேண்டும் என நினைத்தேன். நான் எந்த அவசரத்திலும் இல்லை. டைம் இருக்கிறது என விட்டுவிட்டேன்.

குட்டி ஸ்டோரி எனக்கு பிடித்ததற்கு காரணம் டீம் தான். நலன் குமாரசாமி - விஜய் சேதுபதி கூட்டணி சேர்ந்தால் நல்ல காம்பினேஷன் வரும். நலனின் வொர்க் எனக்கு மிகவும் பிடிக்கும். எனவே தான் இந்தக் கதையில் பணியாற்ற முடிவெடுத்தேன்..
மூன்று வருடங்களுக்கு பின்னர் தமிழில் நடிக்கிறேன். முதல் நாள் படப்பிடிப்பு கொஞ்சம் பயமாக இருந்தது. ஆனால் விஜய் சேதுபதி இயல்பாக்கி விட்டார். அவர் நிறைய சொல்லித் தருவார். படப்பிடிப்புக்கு இடையே நிறைய பேசுவோம். அவரிடமிருந்து கற்றுக் கொண்டேன்.



நலன் மிகவும் பொறுமையானவர். அவரது அணுகுமுறை மிகவும் மென்மையாக இருக்கும். சில நேரங்களில் அவர் பேசுவது புரியாது. கூர்ந்து கவனித்தால் புரிந்துவிடும். நான் இதற்கு முன் ரொமான்ஸ் காட்சிகளில் அதிகம் நடித்ததில்லை. அதனால் விஜய் சேதுபதியுடனான ரொமான்ஸ் காட்சிகளில் கஷ்டமாக இருந்தது. அப்போது நான் கொஞ்சம் அழுதேன். அது அழக்கூடிய சீன் தான்.

விஜய் சேதுபதி மிகவும் ஈஸியாக நடித்து விடுவார். அவர் நடிக்கும் போதே நடிக்கிறாரா இல்லையா என்பதே தெரியாது. அவர் ஏராளமான படங்களில் பணியாற்றியிருக்கிறார். மிகச்சிறந்த அனுபவங்களைக் கொண்டவர் விஜய் சேதுபதி.” இவ்வாறு அதிதி பாலன் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
Published by:Sheik Hanifah
First published: