ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கோபத்தின் உச்சத்தில் விக்ரம் மகன் துருவ்... ஆதித்ய வர்மா டீசர் ரிலீஸ்..!

கோபத்தின் உச்சத்தில் விக்ரம் மகன் துருவ்... ஆதித்ய வர்மா டீசர் ரிலீஸ்..!

ஆதித்ய வர்மா படத்தில் துருவ் விக்ரம்

ஆதித்ய வர்மா படத்தில் துருவ் விக்ரம்

விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

‘ஆதித்ய வர்மா’ படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

கடந்த 2017-ம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி சக்கைபோடு போட்ட படம் அர்ஜுன் ரெட்டி. சந்தீப் வங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த அந்தப் படம் தமிழில் ‘வர்மா’ எனும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இதனை தமிழில் இயக்குநர் பாலா இயக்கியிருந்தார். இதில் நாயகனாக நடிகர் விக்ரமின் மகன் துருவ் அறிமுகமாக இருந்தார். அவருக்கு ஜோடியாக வங்காள மொழி நடிகை மேகா நடித்திருந்தார்.

இ4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்த இந்தப் படம் ரிலீசுக்கு தயாராகியிருந்த நிலையில் படம் கைவிடப்பட்டுவிட்டதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. அதில், இதே கதை புதிய இயக்குநர், தொழில்நுட்ப கலைஞர்கள் உடன் மீண்டும் தயாரிக்கப்பட்டு திரையிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து படத்தின் புதிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. அதில், ‘ஆதித்ய வர்மா’ என்ற புதிய டைட்டிலுடன் இந்தப் படத்தை அர்ஜுன் ரெட்டி பட இயக்குநரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கிரிசய்யா இயக்குவார் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது ஆதித்ய வர்மா படத்தின் புதிய டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இரண்டாவது முறையாக ரீமேக் செய்யப்பட்டு வெளியாகியிருக்கும் இந்த டீசரை திரைவிமர்சகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்தப் படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக பனிதா சந்து மற்றும் பிரியா ஆனந்த் ஆகியோர் நடித்துள்ளனர். ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்ய அர்ஜுன் ரெட்டி படத்துக்கு இசையமைத்த ராதான் இந்தப் படத்துக்கும் இசையமைத்துள்ளார். விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

' isDesktop="true" id="168377" youtubeid="-kzOQPafU8c" category="entertainment">

First published:

Tags: Actor dhruv