ஆதித்ய வர்மா படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி சக்கைபோடு போட்ட படம் அர்ஜுன் ரெட்டி. சந்தீப் வங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த அந்தப் படம் தமிழில் ‘வர்மா’ எனும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இதனை தமிழில் இயக்குநர் பாலா இயக்கியிருந்தார். இதில் நாயகனாக நடிகர் விக்ரமின் மகன் துருவ் அறிமுகமாக இருந்தார். அவருக்கு ஜோடியாக வங்காள மொழி நடிகை மேகா நடித்திருந்தார்.
இந்தப் படத்தை இ4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது. படம் ரிலீசுக்கு தயாராகியிருந்த நிலையில் படம் கைவிடப்பட்டுவிட்டதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டது.
இதையடுத்து இந்தப் படத்தை அர்ஜூன் ரெட்டி பட இயக்குநர் சந்தீப் வங்காவிடம் உதவியாளராகப் பணியாற்றிய கிரிசய்யா ஆதித்ய வர்மா என்ற டைட்டிலுடன் இயக்கினார். பாலிவுட் படமான அக்டோபர் படத்தில் நடித்து கவனம் பெற்ற பனிதா சந்து இந்தப் படத்தில் துருவ்வுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் பிரியா ஆனந்தும் இந்தப் படத்தில் நடித்துள்ளார்.
ஏழாம் அறிவு படத்துக்குப் பின் ரவி.கே.சந்திரன் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ரதன் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்தப் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் ஆதித்ய வர்மா படம், தீபாவளிக்குப் பிறகு இரண்டு வாரங்கள் கழித்து நவம்பர் 8-ம் தேதி திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
On the auspicious day of Ganesh Chathurthi, we’d like to announce the release date of our film Adithya Varma.#AdithyaVarma is ready to conquer your hearts on November 8th!
Catch you later!
Happy Vinayaka Chathurthi@GIREESAAYA @cvsarathi @e4echennai @DhruvVikram8 @BanitaSandhu pic.twitter.com/AxSpW2He2f
— E4 Entertainment (@E4Emovies) September 2, 2019
வீடியோ பார்க்க: ரஜினி VS கமல்... யார் பிக்பாஸ்?
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor dhruv