• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • கணித மேதையின் பயோபிக்கில் நடிக்கும் வித்யாபாலன்

கணித மேதையின் பயோபிக்கில் நடிக்கும் வித்யாபாலன்

வித்யா பாலன்

வித்யா பாலன்

மனித கம்ப்யூட்டர் என்றழைக்கப்படும் சகுந்தலா தேவியின் கதாபாத்தித்தில் நடிப்பதை ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளேன்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    கணித மேதை சகுந்தலா தேவியின் வாழ்க்கை வரலாற்று கதையில் நாயகியாக நடிக்கிறார் வித்யாபாலன்.

    சிக்கலான கணக்குகளை அதிவேகத்தில் முடித்து மனித கம்ப்யூட்டர் என்று போற்றப்படுவர் சகுந்தலா தேவி. அவரது வாழ்க்கை வரலாற்றை அனுமேனன் திரைப்படமாக இயக்குகிறார். இந்தப் படத்தில் சகுந்தலாதேவி கதாபாத்திரத்தில் நடிகை வித்யா பாலான் நடிக்கிறார்.

    இந்தப் படம் குறித்து பேசியுள்ள வித்யாபாலன், “மனித கம்ப்யூட்டர் என்றழைக்கப்படும் சகுந்தலா தேவியின் கதாபாத்தித்தில் நடிப்பதை ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளேன். தனது தனித்துவத்தைப் போற்றி, வலுவான பெண்ணியக் குரலாக இருந்து, வெற்றியடையும் வழியில் பலரது விமர்சனங்களையும் தைரியமாகக் கடந்து வந்தவர்.

    தேசத்தில் பலருக்கும் உத்வேகம் தரும் பெண்மணியின் கதையை திரைக்கு கொண்டுவருவதில் எங்கள் அனைவருக்கும் பெருமை. உலகையே ஆச்சர்யப்பட வைத்தவர், இந்தியாவின் சிறிய நகரத்தைச் சேர்ந்த ஒரு பெண் என்பது எவ்வளவு அற்புதமான விஷயம்” என்று கூறியுள்ளார்.

    நடிகை வித்யாபாலன் தற்போது அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து முடித்துள்ளார்.

    படிக்க: ஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது - பிரமாண்ட செட்டில் பிக்பாஸ் 3 ஷூட்டிங்

    நண்பர்களுடன் வேற லெவல் கொண்டாட்டத்தில் ராய்லட்சுமி!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: