• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • அரசியல் கேள்விக்கு சர்கார் ஸ்டைலில் பதிலளித்த வரலட்சுமி

அரசியல் கேள்விக்கு சர்கார் ஸ்டைலில் பதிலளித்த வரலட்சுமி

நடிகை வரலட்சுமி

நடிகை வரலட்சுமி

தனது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் உள்ள வைஷ்ணவா கல்லூரியில் 35 நாப்கின் இயந்திரங்களை கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளின் பயன்பாட்டிற்கு வரலட்சுமி சரத்குமார் வழங்கினார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    அரசியல் என்பது கெட்டவார்த்தை இல்லை என்றும், ஒருவிரல் புரட்சியை உண்டாக்க வேண்டும் என்றும் நடிகை வரலட்சுமி சரத்குமார் கூறியுள்ளார்.

    தனது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் உள்ள வைஷ்ணவா கல்லூரியில் 35 நாப்கின் இயந்திரங்களை கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளின் பயன்பாட்டிற்கு வரலட்சுமி சரத்குமார் வழங்கினார்.

    பின்னர் பேசிய அவர், எனது பிறந்தநாளை முன்னிட்டு இந்த நாப்கின் இயந்திரங்களை வழங்குவதற்கு மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், பெண்கள் தனது பாதுகாப்பை தாங்களே உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

    நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சரத்குமாருடன் இணைந்து அரசியலில் பணியாற்றுவீர்களா என்ற கேள்வியை வரலட்சுமியிடம் செய்தியாளர்கள் முன் வைத்தனர். அதற்கு பதிலளித்த வரலட்சுமி, சரத்குமார் அரசியலுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை எனவும், அவர் வைக்கும் கூட்டணி குறித்து அவர்தான் கூறவேண்டும் என்றும் கூறினார்.

    Actress VaraLakshmi

    தொடர்ந்து பேசிய அவர், “அரசியல் என்பது கெட்ட வார்த்தை இல்லை. ஒருவிரல் புரட்சியை உண்டாக்க வேண்டும். சரியான நேரத்தில் நன்கு கற்றுவிட்டு அரசியலுக்கு வருவேன்” என்றார்.

    விஜயகாந்த் - சரத்குமார் சந்திப்பு - வீடியோ

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: