பிக்பாஸ் வீட்டிற்குள் போலீஸ் நடத்திய விசாரணை என்ன? வனிதா விளக்கம்!

வனிதா மற்றும் ரேஷ்மா

குழந்தைக் கடத்தல் வழக்கை முடித்து வைப்பதற்காகவே பிக்பாஸ் வீட்டிற்கு வந்ததாக போலீசார் தெரிவித்ததாக வனிதா கூறியுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற தெலுங்கானா போலீஸ் நடத்திய விசாரணை குறித்து வனிதா விளக்கமளித்துள்ளார்.

    பிரபல திரைப்பட நடிகர் விஜயகுமாரின் மகள் நடிகை வனிதா. இவருக்கும் தெலங்கானவைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பவருக்கும் கடந்த 2007 -ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஜெனிதா என்கிற மகள் இருக்கிறாள். இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2012 -ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர்.

    இதையடுத்து மகள் ஜெனிதா, தந்தை ஆனந்தராஜூவுடன் தெலங்கானாவில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது மகளை வனிதா பள்ளிக்கு செல்லும் போது கடத்தி சென்றதாக முன்னாள் கணவர் ஆனந்தராஜ் நசரத்பேட்டை காவல் நிலையத்தில் தெலங்கானா காவல் துறையினர் உதவியுடன் புகார் அளித்தார்.

    பிக்பாஸ் 3: யாரு பைனல்ஸ் போவாங்க? யாரு எலிமினேட் ஆவாங்க? பொன்னம்பலம் ஓபன் டாக்!

    பின்னர் புகார் குறித்து விசாரிக்க நேற்று காலை தெலங்கானா மற்றும் நசரத்பேட்டை காவல் துறையினர்  பிக்பாஸ் வீட்டிற்க்கு சென்றனர்.

    அங்கு வனிதாவிடம் விசாரணை செய்வதற்கு பிக்பாஸ் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. நடிகை வனிதா நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்தவுடன் விசாரனை மேற்கொள்ளுங்கள் என நிர்வாகம் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

    மேலும் தொடர்ந்து போலீசார் நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதன்பிறகு, வனிதாவிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

    அந்த விசாரணை குறித்து பிக்பாஸ் வீட்டிற்குள் வனிதா பேசும் வீடியோவை புரோமோவாக நிகழ்ச்சிக்குழு வெளியிட்டுள்ளது.

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் சாக்சிக்கு மலர்ந்த காதல்!

    அதில், போலீஸ் விசாரணை முடிந்து வீட்டிற்குள் மறுபடியும் வரும் வனிதா மற்றொரு போட்டியாளரான ரேஷ்மாவிடம் போலீஸ் விசாரணை குறித்து கூறுகிறார்.

    அப்போது, இந்த வழக்கை முடித்து வைப்பதற்காகவே பிக்பாஸ் வீட்டிற்கு வந்ததாக போலீசார் தெரிவித்ததாக வனிதா கூறியுள்ளார்.

    மேலும், வழக்கு முடியும் வரை குழந்தையை தந்தையுடன் அனுபுங்கள் அல்லது உங்களிடம் தான் குழந்தை உள்ளது என்று ஒரு வாக்குமூலம் கொடுத்துவிட்டு குழந்தையையும் நேரில் காட்ட வேண்டும் என்று போலீசார் கூறியதாக வனிதா தெரிவித்துள்ளார்.

    Also see...

    Published by:Vinothini Aandisamy
    First published: