Home /News /entertainment /

வரவேற்பை பெறும் `96’: ஜானு கேரக்டர் குறித்து த்ரிஷா ட்வீட்!

வரவேற்பை பெறும் `96’: ஜானு கேரக்டர் குறித்து த்ரிஷா ட்வீட்!

நடிகை த்ரிஷா

நடிகை த்ரிஷா

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    `96’ படத்தில் ஜானு கதாபாத்திரம் உங்கள் அனைவருக்கும் பிடித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி என்று நடிகை த்ரிஷா கூறியுள்ளார்.

    இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான படம் '96'. காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் ராமச்சந்திரனாக விஜய் சேதிபதியும், ஜானகி தேவி கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவும் நடித்துள்ளனர். நந்தகோபால் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. பள்ளிக்காதலை இந்தப் படம் பேசுவதால் படத்தை பார்க்கும் பார்வையாளர்கள் வெகுவாக இந்தப் படத்தை பாராட்டி வருவதோடு, அவர்களது பள்ளிப்பருவ காதலையும் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.



    இந்நிலையில், நடிகை த்ரிஷா தனது ட்விட்டர் பதிவில், ‘96’ படத்தில் ஜானு கதாபாத்திரம் உங்கள் அனைவருக்கும் பிடித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இந்தப் படம் ஒரு அணியின் உழைப்பு. வாழ்த்துகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. காதலின் பெயரால் நாங்கள் உணர்ந்த சின்னச் சின்ன மாயத்தை எல்லாம் இந்தப் படத்தில் நாங்கள் அனைவரும் சேர்த்திருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: 96 movie, Kollywood, Trisha, Twitter

    அடுத்த செய்தி