Home /News /entertainment /

`96’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ஹீரோயின் யார்?

`96’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ஹீரோயின் யார்?

த்ரிஷா, விஜய் சேதுபதி

த்ரிஷா, விஜய் சேதுபதி

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் நடிகை த்ரிஷாவே நடிக்கிறார்.

    விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான ‘96’ திரைப்படம் அண்மையில் தமிழில் வெளியான மிகச்சிறந்த காதல் படமாக கொண்டாடப்பட்டு வருகிறது. படம் பார்க்கும் ரசிகர்களை தங்கள் பள்ளி கால நினைவுகளுக்கே அழைத்து போகும்.

    ஆரம்பத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா முதல்முறையாக இணைவதுதான் இப்படத்துக்கு ஒரு எதிர்ப்பார்பாக இருந்தது. ஆனால் ரிலீஸுக்கு முன்பு வெளியான டீசரும், பாடல்களும் வைரலாகி இளைஞர்கள் மத்தியில் இப்படம் மீதான எதிர்பார்ப்பை பன்மடங்கு உயர்த்தியது.

    1996-ல் ஒன்றாக பள்ளியில் படித்த விஜய் சேதுபதியும், த்ரிஷாவும் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பிரிகின்றனர். 22 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு ரீ-யூனியனில் மறுபடியும் சந்திக்கும் அவர்களின் வாழ்வில் ஓரு இரவு முழுவதும் நடக்கும் சம்பவங்களின் தொகுப்புதான் இந்த 96.

    சில படங்கள் ரசிகனை 3 மணி நேரம் திருப்திப்படுத்தி அனுப்பிவிடும். ஆனால் ஒருசில படங்கள் தான் படம் முடிந்த பிறகும் ரசிகர்களுடன் உரையாடிக்கொண்டே இருக்கும். அந்த வகையில் படம் முடிந்து வெளியே வரும் ஒவ்வொருவரும் தங்கள் பள்ளி கால நினைவுகளைச் சுமந்துகொண்டே வெளியே வருவது தான் ‘96’ படத்தின் கூடுதல் சிறப்பு.

    விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகியுள்ள 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் நடிகை த்ரிஷாவே நடிக்கிறார். பள்ளிப்பருவ காதலை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு, தமிழ் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து 96 படம் தெலுங்கிலும் வெளியாக உள்ளது.  நான் ஈ புகழ் நானி கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில், த்ரிஷா கதாபாத்திரத்தில் அவரே நடிப்பதாக தற்போது ஒப்புக்கொண்டுள்ளார்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: 96 movie, 96 telugu remake, Trisha, Vijay sethupathi

    அடுத்த செய்தி