Home /News /entertainment /

திரிஷாவின் நீண்டநாள் ஆசை நிறைவேறியது: ரஜினியின் 'பேட்ட' படத்தில் இணைந்தார்!

திரிஷாவின் நீண்டநாள் ஆசை நிறைவேறியது: ரஜினியின் 'பேட்ட' படத்தில் இணைந்தார்!

நடிகை த்ரிஷா

நடிகை த்ரிஷா

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    '96' படத்தின் வெற்றியால் உற்சாகமடைந்திருக்கும் த்ரிஷா, தற்போது ரஜினியின் பேட்ட படப்பிடிப்பில் இணைந்திருப்பதை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் உறுதிபடுத்தியுள்ளார்.

    இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் உருவாகும் ‘பேட்ட’ ரஜினிகாந்த் நடிக்கும் 165-வது படம். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைக்கிறார்.

    இந்தப் படத்தில் பாலிவுட்டின் பிரபல நடிகர் நவாஸுதீன் சித்திக், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, த்ரிஷா, மேகா ஆகாஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார். கடந்த ஜூன் மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

    இந்நிலையில் த்ரிஷா நடித்து சமீபத்தில் வெளியான 96 படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. சிறிய இடைவேலைக்கு பிறகு படத்தில் நடித்திருந்தாலும் தனது ரசிகர்கள் அளித்த உற்சாக வரவேற்பு த்ரிஷாவிற்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும், 96 படத்தின் வெற்றியால் உற்சாகமடைந்திருக்கும் த்ரிஷா, தற்போது ரஜினியின் பேட்ட படப்பிடிப்பில் இணைந்திருப்பதை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் உறுதிபடுத்தியுள்ளார். வாரணாசியில் நடைபெறும் இதன் படப்பிடிப்பில், படத்தின் பிளாஷ்பேக் காட்சிகள் படமாகி வருகின்றன. இதில் ரஜினிக்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருவதாகவும், வாரணாசியில் படமாக்கப்படும் இக்காட்சிகள் மதுரை பின்னணியில் சித்தரிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த பிளாஷ்பேக் காட்சிகளில் முறுக்கு மீசை கெட்டப்பில் ரஜினி நடித்து வருகிறார்.

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: 96 movie, Actress Trisha, Actress trisha twitter page, Petta movie, Rajnikanth, Trisha Tweet

    அடுத்த செய்தி