ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஏ.ஆர்.முருகதாஸ் கதையில் நடிக்கும் த்ரிஷா!

ஏ.ஆர்.முருகதாஸ் கதையில் நடிக்கும் த்ரிஷா!

த்ரிஷா

த்ரிஷா

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  ஏ.ஆர்.முருகதாஸ் கதையில் நாயகியாக நடிக்க த்ரிஷா ஒப்பந்தமாகியுள்ளார்.

  த்ரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘96’ படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று ஹிட் அடித்தது. இந்தப் படத்தை அடுத்து பேட்ட படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்தார் த்ரிஷா. அதேவேளையில் மலையாளத்தில் நிவின் பாலி - த்ரிஷா நடித்த ‘ஹே ஜீட்’ படமும் அவருக்கு வெற்றியைக் கொடுத்தது.

  தற்போது அட்வெஞ்சர் ஜானரில் உருவாகும் படத்தில் சிம்ரனுடன் இணைந்து நடித்து வருகிறார் த்ரிஷா. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ஆல் இன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்தை சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்குகிறார்.

  படிக்க: அஜித் ஸ்டைலில் பயணிக்கும் த்ரிஷா!

  இந்தப் படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் கதையில் த்ரிஷா நடிக்கிறார். எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி ஆகிய படங்களை இயக்கிய சரவணன் இந்தப் படத்தை இயக்க உள்ளார்.

  மேலும் அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படத்தின் பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

  வீடியோ பார்க்க: சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது உறுதி! ரசிகர்களை உற்சாகப்படுத்திய ரஜினி


  சினிமா செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  பொழுதுபோக்கு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


  Published by:Sheik Hanifah
  First published:

  Tags: A.R.murugadoss, Actress Trisha