ராங்கி சூப்பர் உமன் படம் கிடையாது மிக ரியலாக எடுக்கப்பட்ட திரைப்படம் என நடிகை த்ரிஷா கூறியுள்ளார். அத்துடன் நாயகியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்பது வெறும் 'Tag' தான், என்னை பொறுத்தவரை அனைத்து கதாபாத்திரங்களும் சரிசமமாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். லைகா தயாரிப்பில், இயக்குனர் சரவணன் இயக்கத்தில், நடிகை த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள "ராங்கி" திரைப்படம் டிசம்பர் 30ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் "ராங்கி" படக்குழுவினர் செய்தியாளர் சந்திப்பு சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.
இதில் படத்தின் நாயகி த்ரிஷா, இயக்குனர் சரவணன்,இசையமைப்பாளர் சத்யா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய த்ரிஷா, ராங்கி படத்தின் முக்கியத்துவம் கருதி எந்த ஒரு சமரசமின்றி இரண்டு முறை உஸ்பெகீஸ்தான் சென்று படப்பிடிப்பை நடத்தினோம் என கூறினார். கொரோனா காலகட்டத்தால் படத்திற்காக இரண்டு வருடம் காத்திருந்தோம். ஆனால் தற்போது மகிழ்ச்சியாக இருக்கிறது எனவும் மகிழ்ச்சியடைந்தார்.
ராங்கி ஒரு சூப்பர் உமன் படம் கிடையாது. ஆனால் ரொம்ப ரியலாக எடுக்கப்பட்ட ஆக்ஷன் படம், அருமையாக வந்துள்ளது. உஸ்பெகிஸ்தானில் படப்பிடிப்பை நடத்தினது புதிய அனுபவமாக இருந்தது என்றார்.
இது நாயகியை சார்ந்த படமாக இருந்தாலும், அது ஒரு 'Tag' மட்டுமே. கதாபாத்திரங்கள் சரியாக, நேர்த்தியாக அமையவில்லை என்றால் அது ஓகே ரகத்தில்தான் இருக்கும். எனவே, ஒரு படத்தில் அனைத்து கதாபாத்திரங்களும் மிக மிக முக்கியம் என்று சுட்டிக்கட்டினார். மேலும்,
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குனர் சரவணன், ராங்கி படம் உருவானதற்கு த்ரிஷாவின் பங்களிப்பும், தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பும் மிக உதவாக இருந்ததாக கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actress Trisha