நடிகையாக மாறும் ஆடை வடிவமைப்பாளர்

news18
Updated: March 10, 2018, 5:47 PM IST
நடிகையாக மாறும் ஆடை வடிவமைப்பாளர்
news18
Updated: March 10, 2018, 5:47 PM IST
தமிழ் சினிமாவில் ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றிவரும் நிரஞ்சனி தற்போது நடிகையாக அறிமுகமாகவுள்ளார்.

காவியத் தலைவன், வாயை மூடி பேசவும், பென்சில் உள்ளிட்ட படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றியவர் நிரஞ்சனி.

இவர் அஜித் நடித்த காதல் கோட்டை போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய அகத்தியனின் இரண்டாவது மகள் ஆவார். மேலும் இவரது சகோதரி விஜயலட்சுமி சென்னை 600028 படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து நடித்துவருகிறார். விஜயலட்சுமியைத் தொடர்ந்து நிரஞ்சனியும் நடிகையாக நடிக்கவுள்ளார்.

துல்கர் சல்மான் நடிக்கும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தில் ஸ்ரேயா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நிரஞ்சனி நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
First published: March 10, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்