Home /News /entertainment /

திறமை உள்ளவர்களுக்கு வாய்ப்பு அளிப்பதே என் கடமையாகும் - புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய டாப்ஸி..

திறமை உள்ளவர்களுக்கு வாய்ப்பு அளிப்பதே என் கடமையாகும் - புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய டாப்ஸி..

டாப்ஸி

டாப்ஸி

நடிகை டாப்ஸி திறமை உள்ளவர்களுக்கு வாய்ப்பு அளிப்பதற்காக தற்போது புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். அதில் முதலாவதாக தயாரிக்கும் படத்தில் அவரே நடிக்கிறார்.அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டாப்ஸி வெளியிட்டுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    டாப்ஸி சினிமாவில் அறிமுகமாகி 11 வருடங்கள் ஆகிறது. தமிழ், தெலுங்கில் நடித்தாலும், இன்றைய தேதியில் இந்தியில்தான் அதிக படங்கள் நடிக்கிறார். கடைசியாக அவர் நடித்த ஹசீன் தில்ரூபா ஓடிடியில் நேரடியாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

    டாப்ஸி அவுட்சைடர்ஸ் ஃபிலிம்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். அதன் முதல் தயாரிப்பாக ப்ளெர் தயாராகிறது. இதில் டாப்ஸியே நடிக்கிறார். இதுவொரு நாயகி மையத்திரைப்படம். டாப்ஸியுடன் ஸீ ஸ்டுடியோஸும் தயாரிப்பில் கைகோர்த்துள்ளது



    த்ரில்லர் திரைப்படமான இதன் பர்ஸ்ட் லுக்கை நேற்று தாப்ஸி வெளியிட்டார். படத்தை அவரே தயாரிப்பதால் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறார். இந்தப் படத்தை Ajay Bahl இயக்குகிறார். பவன் சோனி படத்தின் கதை, திரைக்கதையை எழுதியுள்ளார்Ajay Bahl ஆண் விபச்சாரத்தை மையப்படுத்திய பிஏ பாஸ் படத்தை இயக்கியவர். செக்ஷன் 375 என்ற படத்தையும் இயக்கியுள்ளார்.

    Photos : பிங்க் நிற உடைகளில் அசத்தும் பாலிவுட் குயின் கத்ரீனா கைஃப் - போட்டோஸ்

    பழிவாங்கும் நோக்கில் சினிமா இயக்குனர் மீது ஒரு பெண் சுமத்தும் பாலியல் குற்றச்சாட்டைப் பற்றிய படம் இது. இரண்டுமே சிறப்பான, புதிய கதைக்களத்தில் அமைந்த படங்கள். ப்ளெர் அவரது மூன்றாவது படமாகும்



     




    View this post on Instagram





     

    A post shared by Taapsee Pannu (@taapsee)






    2022 இல் ப்ளெர் வெளியாகும் என அறிவித்துள்ளார் தாப்ஸி.
    Published by:Tamilmalar Natarajan
    First published:

    Tags: Taapsee Pannu

    அடுத்த செய்தி