ஜிம்மில் தீவிரமாக உடற்பயிற்சி செய்த தமன்னா - வைரலாகும் வீடியோ

ஜிம்மில் தீவிரமாக உடற்பயிற்சி செய்த தமன்னா - வைரலாகும் வீடியோ

நடிகை தமன்னா

நடிகை தமன்னா ஜிம்மில் தான் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.

  • Share this:
தமிழ், தெலுங்கு, இந்தி என பிசியாக நடித்து வரும் நடிகை தமன்னா, இப்போது தெலுங்கிலும் நடித்து வருகிறார். தமிழில் அயன், தர்மதுரை, பையா, சுறா, சிறுத்தை, வீரம் ஆகிய எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார். இதனால் தமிழ் சினிமாவில் தமன்னாவிற்கென ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. 

இதனிடையே நடிகை தமன்னாவுக்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன், கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. திடீரென காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து, கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அப்போது, அவருக்கு பாசிட்டிவ் என வந்தததால் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சில நாட்கள் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய நிலையில் தற்போது நலமாக இருப்பதாக கூறி இருந்தார்.

எப்போதும் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் கவனம் செலுத்தி வரும் தமன்னா, தொற்றுநோய் பாதிப்பால் சற்று இளைத்து காணப்பட்டார். இதனால் மீண்டும் உடற்பயிற்சியில் ஈடுபட்ட அவர், தான் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், 31 வயதான நடிகை தமன்னா, சாம்பல் நிற ஸ்போர்ட்ஸ் டாப் மற்றும் கருப்பு யோகா பேன்ட் அணிந்து உடற்பயிச்சி செய்வதை காணலாம்

மேலும் இந்த வீடியோவின் தலைப்பில்,  கட்டுக்கோப்பான உடலை பெற விரும்புவோருக்கான தனது உதவிக்குறிப்பையூம் பகிர்ந்து கொண்டார், அதில், அதில், 'பொருத்தமான உடலை பெற நீங்க தீவிரமாக உடற்பயிற்சி செய்ய வேண்டாம். ஆனால், வொர்க்அவுட்டை வழக்கமாகக் கடைப்பிடிக்க வேண்டும்', தொடர்ந்து உடற்பயிற்சி செய்ததால் கொரோனாவுக்கு முந்தைய என் உடல் நிலைக்கு திரும்பி வருகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.  

தனது பயிற்சியாளரான தேவிமீனா சுந்தரம் மற்றும் கிரண் டெம்ப்லா ஆகியோருடன் சீரான பயிற்சி செய்ததன் காரணமாக தான் எனது உடல் கட்டுக்கோப்பாக இருக்கிறது என தமன்னா கூறியுள்ளார். தமன்னாவின் இந்த இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஷேர் செய்யப்பட்ட மூன்று மணி நேரங்களுக்குள் 5,62,049 தடவைகளுக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது. தமன்னாவின் ரசிகர்கள் அவரை  "உடற்பயிற்சி ராணி" என குறிப்பிட்டு பாராட்டியுள்ளனர். 

  
View this post on Instagram

 

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks)

முன்னதாக தமன்னா ஷேர் செய்திருந்த மற்றொரு வீடியோ கிளிப்பில், ‘குர்துண்டா சீதகலம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை பகிர்ந்திருந்தார். ‘Love Mocktail’  திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கான குர்துண்டா சீதகலம் படத்தில் தற்போது தமன்னா நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகர் சத்யா தேவ் நடிக்கிறார். நாக்ஷேகர் ராச்சையா இயக்கி தயாரிக்கும் இந்த திரைப்படத்தின் முதல் படப்பிடிபில் நடந்த சில வேடிக்கையான தருணங்கள் குறித்த காட்சிகளை ஷேர் செய்திருந்தார்.  

 

 

 

 
Published by:Tamilmalar Natarajan
First published: