ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஒரு ட்வீட் உங்கள் நம்பிக்கையை குலைக்கிறதா! பிரச்சாரம் செய்யும் டீச்சராக மாறாதீர்கள் - விவசாயிகளுக்கு ஆதரவாக டாப்ஸி ட்வீட்

ஒரு ட்வீட் உங்கள் நம்பிக்கையை குலைக்கிறதா! பிரச்சாரம் செய்யும் டீச்சராக மாறாதீர்கள் - விவசாயிகளுக்கு ஆதரவாக டாப்ஸி ட்வீட்

டாப்ஸி

டாப்ஸி

ஒரு நிகழ்ச்சி உங்கள் மத நம்பிக்கையை குலைக்குமானால், நீங்கள்தான் உங்களின் மதிப்பினை மறு பரிசீலனை செய்யவேண்டும். மற்றவர்களுக்கு பாடமெடுக்கும் பிரச்சாரகர்களாக மாறக் கூடாது என்று தெரிவித்துள்ளார் டாப்ஸி.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராடி வரும் நிலையில் ‘போலீஸாருடன் விவசாயிகள் மோதல்- புதுடெல்லியில் இண்டெர்நெட்டை கட்’என்ற சிஎன்என் செய்தியைப் பகிர்ந்து பாப் பாடகி ரிஹானா ‘நாம் ஏன் இது பற்றி பேசுவதில்லை?’ என்று கேள்வி எழுப்பி தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். தொடர்ந்து சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் க்ரேட்டா தன்பெர்க், முன்னாள் போர்ன் ஸ்டார் மியா கலிஃபா ஆகியோர் விவசாயிகளுக்கு ஆதரவாக குரலெழுப்பியிருந்தனர்.

  இது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. பலரும் ரிஹானாவுக்கு ஆதரவாகவும் எதிர்த்தும் பதிலளித்து வருகின்றனர். ரிஹானாவுக்கு நடிகை கங்கனா ரனாவத், சச்சின் டெண்டுல்கர், அனில் கும்ப்ளே, நடிகர் அக்‌ஷய் குமார் என பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

  மத்திய அரசின் வெளியுறவுத் துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ஆளுமைகள் மற்றும் நடிகர்களின் ட்வீட் விவசாயிகள் போராட்டத்தில் எந்த தெளிவும் இல்லாமல் போடப்படுகிறது எனவும் இது சரியான செயல்பாடு அல்ல எனவும் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ரிஹானா, க்ரேட்டா தன்பெர்க் பதிவுகளுக்கு எதிராக பாலிவுட்டில் இருந்தும் இந்திய கிரிக்கெட் வட்டத்தில் இருந்தும் கண்டனங்கள் எழுப்பப்பட்டன.

  இதுகுறித்து ட்வீட் செய்துள்ள நடிகை டாப்ஸி, “ஒரு ட்வீட் ஒற்றுமையைக் குலைக்குமானால், ஒரு நகைச்சுவை உங்கள் நம்பிக்கையை மாற்றுமானால், ஒரு நிகழ்ச்சி உங்கள் மத நம்பிக்கையை குலைக்குமானால், நீங்கள்தான் உங்களின் மதிப்பினை மறு பரிசீலனை செய்யவேண்டும். மற்றவர்களுக்கு பாடமெடுக்கும் பிரச்சாரகர்களாக மாறக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

  Published by:Gunavathy
  First published:

  Tags: Taapsee Pannu