முருகதாஸ் ஜி க்ரீன் பார்க் ஹோட்டல் ஞாபகம் இருக்கா...? - பாலியல் புகார் நடிகை ஸ்ரீரெட்டி

news18
Updated: July 11, 2018, 8:00 PM IST
முருகதாஸ் ஜி க்ரீன் பார்க் ஹோட்டல் ஞாபகம் இருக்கா...? - பாலியல் புகார் நடிகை ஸ்ரீரெட்டி
நடிகை ஸ்ரீரெட்டி
news18
Updated: July 11, 2018, 8:00 PM IST
தெலுங்கு பட உலகில் பாலியல் தொல்லை இருப்பதாக புகார் கூறி நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்ட நடிகை தற்போது தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இயக்குநர் முருகதாஸின் பெயரை வெளியிட்டுள்ளார்.

படவாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் தெலுங்கு சினிமாவில் இருப்பதாக நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மீது புகார் கூறிய நடிகை ஸ்ரீரெட்டி, அதற்காக அரை நிர்வாண போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் தனது முகநூல் பக்கத்தில் ஸ்ரீலீக்ஸ் என்ற பெயரில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களின் பெயர்களையும், புகைப் படங்களையும் செல்போன் குறுந்தகவல்களையும் ஆதாரத்தோடு வெளியிட்டார். இதனால் தெலுங்கு நடிகர் சங்கம் ஸ்ரீரெட்டியுடன் யாரும் நடிக்கக் கூடாது என்று தடை விதித்தது. இதையடுத்து மனித உரிமை ஆணையம் மற்றும் மகளிர் ஆணையத்தின் தலையீட்டால் ஸ்ரீரெட்டி படங்களில் நடிக்க விதித்திருந்த தடையை நீக்கி ஸ்ரீரெட்டி தொடர்ந்து படங்களில் நடிக்கலாம் என்று தெலுங்கு நடிகர் சங்கம் அறிவித்தது.

தெலுங்கு திரையுலகின் பெரிய தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் மீது புகார் அளித்ததால் அவருக்கு வரும் பட வாய்ப்புகள் வெகுவாக குறைந்து விட்டது. இதையடுத்து தமிழ் சினிமாவிலும் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை இருப்பதாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் ஸ்ரீரெட்டி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தனது ஃபேஸ்புக் பதிவில் இயக்குநர் முருகதாஸ் தனக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி தரவில்லை என பதிவிட்டிருக்கிறார். அப்பதிவில், “முருகதாஸ் ஜி எப்படி இருக்கீங்க. கிரீன் பார்க் ஹோட்டல் ஞாபகம் இருக்கிறதா... வெள்ளி கொண்டா ஸ்ரீநிவாஸ் மூலமாக நாம் சந்தித்தோம். எனக்கு வாய்ப்பு தருவதாக உறுதியளித்தீர்கள். அங்கு நம்மிடையே நடந்தது நிறைய.. ஆனால் இதுவரை நீங்கள் எந்த வாய்ப்பும் தரவில்லை . நீங்கள் நல்ல மனிதர்” என்று பதிவிட்டுள்ளார்.

First published: July 11, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்