சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கும் ஸ்ரீரெட்டி

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கும் ஸ்ரீரெட்டி

ஸ்ரீரெட்டி - சில்க் ஸ்மிதா

தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகவுள்ள மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் பயோபிக்கில் தான் நடிப்பதை உறுதி செய்துள்ளார் நடிகை ஸ்ரீரெட்டி.

  • Share this:
எண்பதுகளிலும், தொண்ணூறுகளிலும் தென்னிந்திய திரைப்பட இயக்குனர்களாலும் தயாரிப்பாளர்களாலும் தவிர்க்க முடியாத கவர்ச்சி நடிகையாக இருந்தவர் சில்க் ஸ்மிதா.

அவருக்கு முன்னரே பல கவர்ச்சி நடிகைகளை சினிமா உலகம் பார்த்திருக்கிறது என்றாலும் தன்னுடைய மயக்கும் விழிகளாலும், வாளிப்பான உடல் கட்டினாலும் மொத்த தென்னிந்திய ரசிகர்களையும் கட்டிப் போட்ட ஒரு கவர்ச்சி நடிகை அவர்.

ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்து சிறுவயதில் சாப்பாட்டுக்கே மிகவும் கஷ்டப்பட்ட விஜயலட்சுமி என்ற சில்க் ஸ்மிதா தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த போராட்டங்கள் ஏராளம் கணக்கிலடங்காத திருப்பங்கள் நிறைந்த அவருடைய வாழ்க்கையை ஏற்கெனவே 'அவள் அப்படித்தான்' என்ற பெயரில் காயத்ரி ஃபிலிம்ஸ் சித்ரா லட்சுமமணனும் முரளி சினி ஆர்ட்ஸ் எச். முரளியும் இணைந்து தயாரிப்பதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அறிவித்தனர்.

மேலும் படிக்க: நேரடியாக விஜய் டிவியில் வெளியாகும் ஏலே திரைப்படம் - தயாரிப்பாளர்கள் அறிவிப்பு

பல விளம்பரப் படங்களை இயக்கியவரும் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் இயக்குநருமான மணிகண்டன் இந்தப் படத்தை இயக்குவார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது நடிகை ஸ்ரீரெட்டியும் சில்க் ஸ்மிதாவின் பயோபிக்கில் தான் நடிக்க இருப்பதாகவும், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகவிருக்கும் இந்தப் படத்தை மது என்ற விளம்பர பட இயக்குநர் இயக்குவதாகவும் அறிவித்துள்ளார்.
Published by:Sheik Hanifah
First published: