• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • 'தரக்குறைவான வார்த்தைகள் வேண்டாமே': ஸ்ரீபிரியா அட்வைஸ்

'தரக்குறைவான வார்த்தைகள் வேண்டாமே': ஸ்ரீபிரியா அட்வைஸ்

நடிகை ஸ்ரீபிரியா

நடிகை ஸ்ரீபிரியா

  • News18
  • Last Updated :
  • Share this:
    சமூக வலைதளங்களில் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள் என்று நெட்டிசன்களுக்கு நடிகை ஸ்ரீபிரியா அறிவுரை வழங்கியுள்ளார்.

    தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, கடந்த 16-ம் தேதி நாகர்கோவிலில் பத்திரிகையாளர் சந்திப்பில், நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் குறித்த ஒரு கேள்விக்கு பதிலளித்தார். அப்போது அவர், “கமலின் கட்சி கருவிலேயே கலைக்கப்பட வேண்டிய சப்பாணிக் குழந்தை, அது வளர்ந்தால் நாட்டுக்கே ஆபத்து” என மாற்றுத்திறனாளிகளை மேற்கோளிட்டு பேசினார்.

    இந்நிலையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான ஸ்ரீபிரியா தனது ட்விட்டரில், “தாய்மையின் பெருமை அறியாதவர் போலும் மாண்புமிகு அமைச்சர் அவர்கள். மாற்றுத்திறமை கொண்டவர்கள், தேசிய விருது பெரும் திறமை கொண்டவர்கள். ஒரு சிலரின் வளர்ச்சி போல மாற்றுத்திறனாளிகள் வளர்வதால் மக்களுக்கு எவ்வித ஆபத்தும் இல்லை. அவர்கள் கருணையும் அன்பும் நிறைந்தவர்கள்.



    தயவு செய்து தாய்மையையும், சக மனிதர்கள் யாராக இருப்பினும் உங்கள் சொந்த, அறிவற்ற வசைகளுக்கு பயன்படுத்தாது இருப்பின் சிறப்பாக இருக்கும். ஒரு பெண்ணை, காலம் சென்ற உங்கள் தலைவர் (ஜெ.ஜெயலலிதா அம்மையார்) தலைவராக தெய்வமாக போற்றுவதாகக் கூறிக்கொள்ளும் நீங்கள், இப்படி பெண்மையையும், அவள் ஈன்றெடுக்கும் பிள்ளையையும் கேவலப்படுத்தும் குணத்தை மாற்றிக்கொண்டால் பெண்களாகவும், அன்னையராகவும் உங்களை மன்னிக்க முயலுவோம்” என்று பதிவிட்டிருந்தார்.

    இதையடுத்து ஸ்ரீபிரியா தற்போது தனது ட்விட்டர் பதிவில், “சிறு பிள்ளைகளைக்கூட மரியாதையுடன் ‘வாங்க’என்று அழைப்பது என் வழக்கம்... சிலர் குறிப்பாக ட்விட்டர் போன்றவற்றில் ‘வா போ,வாடி போடீ’ என்றெல்லாம் ஒருமையில் குறிப்பிடுவது நாகரீகமற்ற செயல். மாற்றிக்கொண்டால் சிறப்பாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: