கர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை - இன்ப அதிர்ச்சி கொடுத்த ஸ்ரேயா அஞ்சன்!

ஸ்ரீதேவி அசோக்

'செல்லமடி நீ எனக்கு' என்ற சீரியலில் மீனா என்கிற கேரக்டரில் நடித்து சின்னத்திரையில் அறிமுகம் ஆனார்.

  • Share this:
சின்னத்திரை நடிகையான ஸ்ரீதேவி மற்றும் அவரது கணவர் அசோக் சிந்தலா இருவரும் இன்னும் சில வாரங்களில் தங்களது முதல் குழந்தையை வரவேற்பதில் உற்சாகமாக இருக்கின்றனர். இந்நிலையில் கர்ப்பிணியாக இருக்கும் நடிகை ஸ்ரீதேவி அசோக்கின் வீட்டிற்கு நேரில் சென்ற அவரது தோழியான நடிகை ஸ்ரேயா அஞ்சன், ஸ்ரீதேவிக்கு சர்ப்ரைஸ் வளைகாப்பு நடத்தி உற்சாகப்படுத்தி உள்ளார். இந்த சர்ப்ரைஸ் மொமென்ட்டின் போட்டோக்களை நடிகை ஸ்ரீதேவி அசோக் தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்து உள்ளார்.

சின்னத்திரையில் சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பூவே உனக்காக’ மற்றும் விஜய் டிவியின் காற்றுக்கென்ன வேலி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. தற்போது கர்ப்பமாக இருக்கும் காரணத்தால் சின்னத்திரைக்கு குட்டி பிரேக் விட்டுள்ளார். இவர் சின்னத்திரைக்கு வருவதெற்கு முன்னர் கடந்த 2004ல் தனுஷ் நடிப்பில் வெளியான புதுக்கோட்டையிலிருந்து சரவணன் திரைப்படத்தில் செல்வி என்ற கேரக்டரில் நடித்தன் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். பின்னர் 2006ல் ஸ்ரீகாந்த் மற்றும் பாவனா நடித்த கிழக்கு கடற்கரை சாலை திரைப்படத்தில் தேவி என்ற கேரக்டரில் நடித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
பின்னர் 2007ம் ஆண்டு 'செல்லமடி நீ எனக்கு' என்ற சீரியலில் மீனா என்கிற கேரக்டரில் நடித்து சின்னத்திரையில் அறிமுகம் ஆனார். அதன் பிறகு தொடர்ந்து வைரநெஞ்சம், இளவரசி, தங்கம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்தார். பின்னர் கலைஞர் டிவி-யில் ஒளிபரப்பான மானாட மயிலாட ரியாலிட்டி டான்ஸ் ஷோவில் பங்கேற்று தன் நாடன் திறமையால் ரசிகர்களை கவர்ந்தார்.

Also read... Raja Rani: அர்ச்சனாவின் சதிகள் அம்பலம் - ராஜா ராணி 2 சீரியலில் உட்சக்கட்ட திருப்பம்!

அதை தொடர்ந்து இருமலர்கள், பிரிவோம் சந்திப்போம், கஸ்தூரி, இளவரசி, வாணி ராணி, சிவசங்கரி, பூவே பூச்சூடவா, கல்யாணம் முதல், காதல் வரை, செம்பருத்தி, ராஜா ராணி, நிலா, சித்திரம் பேசுதடி, கல்யாண பரிசு, அரண்மனை கிளி, பொம்முக்குட்டி அம்மாவுக்கு உள்ளிட்ட ஏராளமான சீரியல்களில் சன் டிவி, ஜெயா டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் உள்ளிட்ட பல சேனல்களின் சீரியல்களில் நடித்து சின்னத்திரை ரசிகர்களை ஈர்த்தார்.
டிவி சீரியல்களில் வில்லி கேரக்டர் முதல் காமெடி மற்றும் குணச்சித்திர கேரக்டர் வரை பல வேடங்களில் நடித்து தன் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி உள்ளார் நடிகை ஸ்ரீதேவி. இந்நிலையில் ஸ்டார் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலி சீரியலில் ஷியாமாளா என்ற கேரக்ட்ரிலும், சன் டிவி-யில் ஒளிபரப்பப்படும் பூவே உனக்காக சீரியலில் தனலட்சுமி கேரக்டரிலும் நடித்து வந்த ஸ்ரீதேவி தற்போது ஓய்வில் உள்ளார். இவர் அசோக் சிந்தலாவை கடந்த ஏப்ரல் 14, 2018-ல் திருமணம் செய்து கொண்டார். நடிகை ஸ்ரீதேவி மற்றும் கணவர் அசோக் தம்பதி கடந்த பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளி உலகிற்கு முதல் குழந்தையை வரவேற்க உள்ளதை அறிவித்தனர். தொடர்ந்து ஸ்ரீதேவியின் வளைகாப்பு விழா நடைபெற்றது.
இந்நிலையில் தான் உடன் பணியாற்றும் நடிகை ஸ்ரேயா அஞ்சன், நடிகை ஸ்ரீதேவி வீட்டிற்கு சென்று சர்ப்ரைஸாக அவருக்கு வளைகாப்பு நடத்தி உள்ளார். இது தொடர்பான போட்டோவை ஷேர் செய்துள்ள ஸ்ரீதேவி, இனிமையான சர்ப்ரைஸிற்கு மிக்க நன்றி தெரிவித்து கொண்டுள்ளார். இந்த சர்ப்ரைஸ் நிகழ்வில் ஸ்ரீதேவியின் பெஸ்ட்டிக்களான ஸ்ரேயா அஞ்சன், ஈரமானா ரோஜாவே புகழ் திரவியம் ராஜகுமாரன், திரவியத்தின் மனைவி ரிது லெனோரா, சாய் பிரமோதிதா மற்றும் பலர் பங்கேற்றனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: