கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட நடிகை ஸ்ரீதேவி மகளின் பிறந்த நாள்: அழகான புகைப்படங்கள்

ஸ்ரீதேவி

நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார், நடிகர் விஜயகுமார் குடும்பத்தின் கடைக்குட்டி, தன் மகளின் ஐந்தாவது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடினார்.

  • Share this:
    நட்சத்திர ஜோடி விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் ஐந்தாவது மற்றும் கடைக்குட்டி மகள் ஸ்ரீதேவி. ஸ்ரீதேவி விஜயகுமார் மிகவும் பிரபலமான குழந்தை நட்சத்திரம். கொழு கொழு குழந்தையாக, நடிகர் சத்யராஜின் வெற்றிப்படமான ரிக்ஷா மாமா பல ஹிட் திரைப்படங்களில் பிரதான பாத்திரத்தில் நடித்தவர் ஸ்ரீதேவி. தமிழில் மட்டுமின்றி, தெலுங்கு மற்றும் கன்னட மொழிப்படங்களிலும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிறகு, சில ஆண்டுகள் இடைவெளி விட்டு, மீண்டும் வெள்ளித்திரையில் நாயகியாக அறிமுகமானார்.

    நடிகர் பிரபாஸ் ஜோடியாக, ஈஸ்வர் என்ற தெலுங்கு படத்தில், கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர், இயக்குனர் கதிர் அவர்களின் காதல் வைரஸ் படத்தில் தமிழில், நடிகர் ரிச்சார்ட் ஜோடியாக அறிமுகமானார். தனுஷ், ஜீவா, மாதவன், உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். நாயகியாக தமிழை விட, அதிகமான தெலுங்கு படத்தில் நடித்தவர் ஸ்ரீதேவி விஜயகுமார்.

    ஹைதிராபாத்தை சேர்ந்த ராகுல் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட ஸ்ரீதேவி, அதற்குப் பிறகு திரைப்படங்களில் நடிக்கவில்லை. இந்த அழகான ஜோடிக்கு, ரூபிகா என்ற அழகான பெண் குழந்தை உள்ளது. ரூபிகாவின் ஐந்தாவது பிறந்தநாளை, மிகவும் கோலாகலமாகக் கொண்டாடி மகிழ்ந்த்திருக்கிறார் ஸ்ரீதேவி விஜயகுமார்.

    சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரீதேவி விஜயகுமாருக்கு, கணிசமான ஃபாலோயர்கள் உள்ளனர். தன் மகளின் பிறந்த நாள் கொண்டாட்ட படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார்.



    பிங்க் நிற உடையில் குட்டி தேவதையாய் அலங்கரிகப்பட்டிருந்தார், கியூட் ரூபிகா. அலங்காரங்களும் கண்ணைப் பறித்தன.



    பிறந்தநாள் கொண்டாட்டப் படங்கள் மட்டுமின்றி, பிரத்யேகமான ஃபோட்டோஷூட் புகைப்படங்களும் அவர் பதிவேற்றி இருந்தார்.




    ‘என் இதயம், என் ஆத்மா, என் வாழ்வின் பொக்கிஷம், இவள் தான்! என்னுடைய சந்தோஷத்துக்கும், அவ்வபோது கொஞ்சம் கண்ணீருக்கும் காரணம் இவளே! என்னுடைய உலகம் இவள்!’ என்று நெகிழ்வான கேப்ஷனுடன் அழகான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்! அம்மாவும், மகளும் லேவண்டர் நிற ஆடையில் தேவதைகள் போல, கனவுலகில் வசிப்பது ன்போல காட்சியளித்தனர்.

    strong>Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ரசிகர்களும், ஸ்ரீதேவி குழந்தையாக இருந்தது போலவே அவரின் மகளும் இருக்கிறார் என்று கமென்ட் செய்திருந்தனர். வனிதா விஜயகுமார் மற்றும் ப்ரீதா விஜயகுமார் ஆகிய இருவரும் ஸ்ரீதேவியின் அக்காக்கள். இவர்கள் இருவருமே திரைப்படங்களில் நடித்தவர்கள். இதிலே, ப்ரீதா விஜயகுமார், பிரபல இயக்குனர் ஹரியை திருமணம் செய்திருக்கிறார்.வனிதா விஜயகுமார், திரைப்படங்கள் தாண்டி, பிக் பாஸ், குக்கு வித் கோமாளி என்று சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.
    Published by:Karthick S
    First published: