ஊரடங்கு நாட்களில் திரைக்கதை எழுதும் சோனியா அகர்வால்!

நடிகை சோனியா அகர்வால்

 • Share this:
  கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறை வரும் ஏப்ரல் 14-ம் தேதி வரை தொடரும் என்று மத்திய, மாநில அரசுகள் தெரிவித்துள்ளன.

  அரசின் இந்த உத்தரவால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் ஓய்வு நேரத்தை எவ்வாறு பயனுள்ள முறையில் கழிக்கிறேன் என்று நடிகை சோனியா அகர்வால் கூறியுள்ளார்.

  அவர் கூறுகையில், தினமும் காலை என் குடும்பத்தினருடன் யோகா செய்கிறேன். அதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது. இந்த நேரத்தில் நம்மை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

  சினிமாவுக்காக திரைக்கதை ஒன்றை தயார் செய்து வருகிறேன். அதற்கான போதுமான நேரம் இருக்கிறது. பறவைகள், விலங்குகளுக்கு உணவு கொடுக்கிறேன். குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிக்க இது அற்புதமான தருணம். வீட்டை விட்டு தேவையிலலாமல் வெளியே செல்ல வேண்டாம். அரசின் உத்தரவை பின்பற்றுங்கள்” என்று கூறியுள்ளார்.

  மேலும் படிக்க: விக்னேஷ் சிவன் அனுப்பிய மீம் இதுதான் - பார்த்திபன் பதிவு  Published by:Sheik Hanifah
  First published: