சூரியின் சிக்ஸ்பேக்கை பாராட்டிய சிம்ரன்!

news18
Updated: September 12, 2018, 10:37 PM IST
சூரியின் சிக்ஸ்பேக்கை பாராட்டிய சிம்ரன்!
சூரி | சிம்ரன்
news18
Updated: September 12, 2018, 10:37 PM IST
பிரபல காமெடி நடிகர் சூரி, சிக்ஸ்பேக்கில் அசத்தும் புகைப்படத்தை சிம்ரன் பாராட்டியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பரோட்டோ சூரியாக பிரபலமடைந்து முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூரி. இவர் தற்போது சிவகார்த்திகேயனுடன் சீமராஜா படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்திற்காக காமெடியில் மட்டும் மெனக்கெடாமல் தனது உடல் அமைப்பையும் முழுவதுமாக மாற்றியுள்ளார்.

படத்திற்காக சிக்ஸ்பேக்கில் மாறியுள்ள நடிகர் சூரியின் புகைப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் ட்விட்டரில் இன்று மாலை வெளியிட்டார். இதையடுத்து சிக்ஸ்பேக் சூரி என்ற ஹேஷ்டேக் இணையத்தில் ட்ரெண்டானது. இதைப்பார்த்த பலரும் சூரியை பாராட்டி வருகின்றனர்.

நடிகை சிம்ரன் தனது ட்விட்டர் பக்கத்தில் , ``இதுதான் உண்மையான கடின உழைப்பு’’ என்று சூரியை பாராட்டியுள்ளார்.
Loading...
மேலும் பிக்பாஸ் பிரபலம் ரம்யா, " அண்ணா வேற லெவல் போங்க" என்று குறிப்பிட்டுள்ளார்.

First published: September 12, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...