‘தெறி’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகை ஸ்ருதிஹாசன் ஒப்பந்தமாகியுள்ளார்.
விஜய் - அட்லீ காம்போவில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான படம் தெறி. வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ். தாணு தயாரித்த இந்தப் படம் வசூலைக் குவித்து வெற்றிப்படமாக அமைந்தது.
இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக எமி ஜாக்சன் மற்றும் சமந்தா ஆகியோர் நடித்திருந்தனர். வில்லனாக மறைந்த பழம்பெரும் இயக்குநர் மகேந்திரன் நடித்திருந்தார். தெறி படத்தின் வெற்றியால் மெர்சல், பிகில் என அடுத்தடுத்து அட்லீயுடன் கூட்டணி அமைத்தார் விஜய்.
இந்தப் படம் வெளியான சமயத்தில் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியானது. இதையடுத்து இந்தப் படத்தை ரீமேக் செய்து வெளியிட தெலுங்கு திரையுலகில் கடும் போட்டியும் நிலவியது.
பின்னர் விஜய் கதாபாத்திரத்தில் நடிகர் ரவிதேஜா நடிப்பது உறுதியானது. தற்போது இந்தப் படத்தில் ஸ்ருதிஹாசன் இணைந்திருப்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழில் இரண்டு கதாநாயகிகள் நடித்த நிலையில் எமி ஜாக்ஷன் கதாபாத்திரத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கவே வாய்ப்புகள் அதிகம். கோபிசந்த் மாலினேனி இயக்கத்தில் இந்தப் படத்தை மது தயாரிக்கிறார்.
வீடியோ பார்க்க: 3 வயது குழந்தை தண்ணீர் கேனில் விழுந்து பலி
Published by:Sheik Hanifah
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.