• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Shriya Saran: கணவருடன் நெருக்கமாக வீடியோ வெளியிட்ட நடிகை ஸ்ரேயா..

Shriya Saran: கணவருடன் நெருக்கமாக வீடியோ வெளியிட்ட நடிகை ஸ்ரேயா..

நடிகை ஸ்ரேயா

நடிகை ஸ்ரேயா

நடிகை ஸ்ரேயா தனது கணவருடன் கேள்வி கேட்டு விளையாடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

  • Share this:
    நடிகை ஸ்ரேயா தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடா என பல மொழிகளிலும் நடித்துள்ளார்.இவர் 2001ஆம் ஆண்டு ‘இஷ்டம் ‘என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். அதையடுத்து 2003 ஆம் ஆண்டு எனக்கு 20 உனக்கு 18 திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.

    அதன் பின்பு தமிழில் தொடர்ந்து படங்கள் நடித்தார். பின்பு 2007 ஆம் ஆண்டு ரஜினிக்கு ஜோடியாக சிவாஜி படத்தில் நடித்தார்.அந்த படம் ஸ்ரேயாவின் திரை வாழ்க்கையில் முக்கியமாக படமாக அமைந்தது.அன்று முதல் இன்று வரை தமிழில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்துள்ளார் என்று கூறலாம்.

    மேலும் தெலுங்கில் தற்போது பிரம்மாண்டமாக உருவாகி வரும்    ’ஆர் ஆர் ஆர்’ திரைப்படத்திலும் ஸ்ரேயா நடித்து வருகிறார்.



    நடிகை ஸ்ரேயா 2018 ஆம் ஆண்டு ஆண்ட்ரே கோஸ்சீவ் என்ற ரஷ்ய டென்னீஸ் வீரரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது கணவருடன் வாழ்ந்து வரும் ஸ்ரேயா அடிக்கடி கணவருடன் சேர்ந்து எடுத்துக்கொள்ளும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிர்வார்.

    இந்நிலையில் தற்போது நடிகை ஸ்ரேயா தனது கணவருடன் போட்டில் செல்லும் போது எடுத்துக்கொண்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

     



     




    View this post on Instagram





     

    A post shared by Shriya Saran (@shriya_saran1109)






    அதில் ஸ்ரேயா தனது கணவரிடம் ,’நான் செய்யும் எந்த விஷயம் உனக்கு தொந்தரவாக இருக்கும் என்று ஸ்ரேயா கேட்க, அதற்கு அவரது கணவன் ’உன் போனில் அதிக ஸ்பேஸ் இல்லை என்று நீ கூறுவது தான்’ என்று சொல்கிறார், பின்பு இருவரும் சிரிக்கின்றனர்.இந்த  வீடியோவை ‘Just like that' என்ற கேப்ஷனோடு ஸ்ரேயா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: