ரோஜா பட பாடலை ஹம்மிங் செய்தபடி நடிகை ஸ்ரேயா பனியில் நனையும் வீடியோ வைரலாகி வருகிறது.
எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. அதைத்தொடர்ந்து ரஜினிகாந்துடன் சிவாஜி, விஜயுடன் அழகிய தமிழ்மகன், விக்ரமுடன் கந்தசாமி என பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் நடித்த ஸ்ரேயா ஒருசில ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார்.
ஸ்ரேயா நடிப்பில் கடைசியாக வெளியான படம் அன்பானவன், அசராதவன், அடங்காதவன். இதையடுத்து அரவிந்த் சாமியுடன் இவர் நடித்திருந்த நரகாசூரன் படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. இந்தநிலையில் பனியில் விளையாடும் வீடியோ ஒன்றைத் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தில் இடம்பெற்றுள்ள புது வெள்ளை மழை பாடலை ஹம்மிங் செய்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
கடந்த ஆண்டு நடிகை ஸ்ரேயாவிற்கும் டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே கோஸ்சீவிற்கும் திருமணம் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.
64.3k Likes, 260 Comments - @shriya_saran1109 on Instagram: "An Indian girl stays Indian at heart ❣ forever ♾ so it's -18 and all I can think of is 'yeh Haseen..."
தமிழ் நடிகர்களின் #10YEARCHALLENGE - வீடியோ
Published by:Sheik Hanifah
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.