• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஷெரீன் - என்ன ஆச்சு தெரியுமா?

தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஷெரீன் - என்ன ஆச்சு தெரியுமா?

ஷெரீன்

ஷெரீன்

ஆஜீத், கேபி, சென்றாயன், அஸ்வின் உள்ளிட்ட ஏராளமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
தடுப்பூசி செலுத்திக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ள ஷெரீன், அதனால் ஏற்பட்ட அனுபவத்தையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

இந்தியாவில் சார்ஸ் கோவிட் 2 வைரஸ் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பை யாரும் கற்பனைக் கூட செய்து பார்க்கவில்லை. சாமானியர்கள் முதல் திரைப்பிரபலங்கள் வரை நன்கு அறிமுகமான ஆயிரக்கணக்கானோர் கோவிட் வைரஸ் பாதிப்பால் உயிரை இழந்துள்ளனர். பிரபல ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர் கே.வி.ஆனந்த், காமெடி நடிகர் பாண்டு, நடிகர் மாறன், ஜோக்கர் துளசி, ஆட்டோகிராப் கோமகன், இயக்குனர் அருண்ராஜா காமராஜ் மனைவி சிந்து உள்ளிட்ட பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். அதே போல தமிழ் சினிமாவில் சூர்யா, விஷால், அதர்வா, ஆண்ட்ரியா, சரத்குமார், சுந்தர் சி என்று பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமாகினார்.

வெள்ளித்திரை மட்டுமல்லாது சின்னத்திரையிலும் கொரோனாவால் பலர் பாதிக்கப்பட்டனர். ஆஜீத், கேபி, சென்றாயன், அஸ்வின் உள்ளிட்ட ஏராளமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டனர். கொரோனா வைரஸிடமிருந்து தப்பிக்க வேண்டுமென்றால் வரும்முன் காப்பது அல்லது தடுப்பூசி போட்டுக்கொள்வது என இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன. கண்ணுக்கு தெரியாத இந்தவைரஸ் காற்றில் பரவி வருவதால் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருப்பவர்கள் கூட வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. சிவகார்த்திகேயன் மற்றும் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட திரைப் பிரபலங்களும் தடுப்பூசி எடுத்துக்கொள்வதன் அவசியத்தை வலியுறுத்தி வீடியோ வெளியிட்டுள்ளனர்.

அவர்கள் வரிசையில் பிக்பாஸ் புகழ் ஷெரீனும் இணைந்துள்ளார். அண்மையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அவர், அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு காய்ச்சல் ஏற்பட்டதாகவும், 102 டிகிரி வரை காய்ச்சல் சென்றதாகவும் கூறியுள்ளார். தாங்கமுடியாத உடல் வலி மற்றும் தலைவலி காரணமாக மிகவும் சோர்வுடன் காணப்படுவதாக தெரிவித்துள்ள ஷெரின், தடுப்பூசி வேலை செய்யத் தொடங்கியிருப்பதாகவும் கூறியுள்ளார்.

Also read... Gouri Kishan: ’எனக்கும் பள்ளியில் இப்படி நடந்தது’ அதிர்ச்சி கிளப்பிய கெளரி கிஷன்

ஷெரீனின் இந்தப் புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள், தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கு பாராட்டு தெரிவித்துள்ளதுடன், ஏன் உடலை குறைத்து ஒல்லியாக இருக்கிறீர்கள்? எனவும் அக்கறையுடன் கேள்வி எழுப்பியுள்ளனர். பிக்பாஸில் குண்டாக இருந்த ஷெரின் தொடர் உடற்பயிற்சியால், ஸ்லிம்மாக இருக்கிறார். கன்னட சினிமாவில் காலடி எடுத்து வைத்த ஷெரீன், செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை படம் மூலம் தமிழ் திரையுலகிற்குள் நுழைந்தார். ஜெயா, ஸ்டூடண்ட் நம்பர் ஒன், விசில் உள்ளிட்ட படங்களை நடித்த அவர், பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை. அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை தொடர்ந்து குஷிப்படுத்தி வருகிறார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: