சிங்கக் குட்டிக்கு புட்டிப்பால் கொடுத்து மகிழும் பிரபல நடிகை - லைக்ஸ் அள்ளும் வீடியோ

சிங்கக் குட்டிக்கு புட்டிப்பால் கொடுத்து மகிழும் பிரபல நடிகை - லைக்ஸ் அள்ளும் வீடியோ

ஷாமாசிகந்தர்

பிரபல நடிகை ஒருவர் சிங்கக் குட்டிக்கு புட்டிப்பால் கொடுக்கும் வீடியோவை தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

  • Share this:
திரைபிரபலங்கள் பெரும்பாலானோர் செல்லப்பிராணிகளை வளர்ப்பதில் அதிகம் ஈடுபாடு காட்டி வருகின்றனர். அதில் நடிகைகள் நாய்க்குட்டிகளை செல்லப் பிராணிகளாக வளர்த்து வருகின்றனர். நடிகை சமந்தா தனது நாய்க்குட்டிக்கு ஹஸ் என்று பெயரிட்டு அது செய்யும் குறும்புத்தனத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவார். அதேபோல் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது நாய்க்குட்டியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் வைரலாகின.

இந்நிலையில் நடிகை ஷாமாசிகந்தர் சிங்கக் குட்டியை தனது மடியில் வைத்து புட்டிப் பால் கொடுக்கும் வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் அந்தக் சிங்கக் குட்டியுடன் அவர் கொஞ்சி விளையாடும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. மேலும் அந்தக் குட்டியை தான் வீட்டிற்கு எடுத்துச் சென்று வளர்க்க ஆசைப்படுவதாகவும் தனது பதிவில் ஷாமாசிகந்தர் குறிப்பிட்டுள்ளார். இவரது இந்த பதிவு ரசிகர்களிடையே கவனம் பெற்று லைக்ஸ்களைக் குவித்து வருகிறது. துபாயில் உள்ள ஃபேம் பார்க்கில் இந்த வீடியோவை அவர் எடுத்ததாக தெரிகிறது. சமீபத்தில் ஷாமாசிகந்தரின் தோழியும் நடிகையுமான லட்சுமி ராயும் சிங்கக் குட்டிக்கு பால் கொடுக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 
View this post on Instagram

 

A post shared by Shama Sikander (@shamasikander)


பாலிவுட்டில் மன், அன்ஸ்: தெ டெட்லி பார்ட், தி காண்ட்ராக்ட், பைபாஸ் ரோடு உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் ஷாமா சிகந்தர், சீரியல்கள், வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களால் நிறைத்திருக்கும் இவரை 1.9 மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர்.
Published by:Sheik Hanifah
First published: