குக் வித் கோமாளி சீசன் 2-இல் கவர்ச்சி நடிகை ஷகிலாவை களமிறக்குகிறது விஜய் டிவி..

குக் வித் கோமாளி சீசன் 2-இல் கவர்ச்சி நடிகை ஷகிலாவை களமிறக்குகிறது விஜய் டிவி..

நடிகை ஷகிலா

குக் வித் கோமாளி சீசன் 2 போட்டியாளர்கள் பட்டியலை விஜய் டிவி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

  • Share this:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி. வனிதா விஜயகுமார், ரம்யா பாண்டியன், உமா ரியாஸ்கான் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் குக் வித் கோமாளி சீசன் 2 நவம்பர் 14-ம் தேதியிலிருந்து ஆரம்பமாவதாக விஜய் டிவி அறிவித்துள்ளது. நடிகை ஷகிலா, பாபா பாஸ்கர், மதுரை முத்து, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா லட்சுமி, கடைகுட்டி சிங்கம் தீபா மற்றும் கன்னி ஆகியோர் இடம்பெறுகிறார்கள்.

மேலும் கோமாளிகளாக புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, வீஜே. பார்வதி, டிக்டாக் சக்தி ஆகியோர் இடம்பெறுவர். கோமாளிகளில் பெரும்பாலானோர் முந்தைய சீசனில் இடம்பெற்றவர்கள். ரக்க்ஷன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் செஃப் வெங்கடேஷ் பட் நடுவராக கலந்து கொள்கிறார்.

மேலும் படிக்க: திருச்சி விஜய் மக்கள் இயக்க ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவு

நகைச்சுவை கலாட்டாக்கள் நிறைந்த இந்த குக் வித் கோமாளி சீசன் 2 குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த ஒரு பொழுதுபோக்கு போட்டியாகும். வேடிக்கை, சிரிப்பு, குறும்பு மற்றும் திறமை ஆகியவை இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக இருக்கும், இது ஒரு புதிய பரிமாணத்தை தொலைக்காட்சி மூலம் நேயர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக சமையலறையில் போட்டியிட உள்ளனர். சமையல் நடவடிக்கைகள் நேயர்களை சிரிக்கவும் வைக்கும் சிந்திக்கவும் வைக்கும். இந்த போட்டியாளர்களுக்கு உதவ சமையல் பற்றி எதுவும் அறிந்திராத உதவியாளர்கள் இவர்களுக்கு நிகழ்ச்சியில் உறுதுணையாக இருக்கப்போவதுதான் பெரும் நகைச்சுவை.
Published by:Sheik Hanifah
First published: