தான் இறந்து விட்டதாக புரளி கிளப்பிய மர்ம நபருக்கு நன்றி தெரிவித்த பிரபல நடிகை ஷகீலா!

ஷகீலா

தனது மரணம் பற்றி பரவிய தகவலுக்கு இறுதியாக நடிகை ஷகீலாவே வீடியோ ஒன்றை வெளியிட்டு முற்றுப்புள்ளி வைத்தார்.

  • Share this:
ஷகீலா என்று பிரபலமாக அறியப்படும் நடிகை ஷகீலா பேகம் அவர்களை பற்றிய அறிமுகம் பெரிதாக தேவையில்லை. குறிப்பாக 80'ஸ் மற்றும் 90'ஸ் கிட்ஸ்களுக்கு. 1980 மற்றும் 1990-களில் பிரபலமான அடல்ட் ஸ்டாராக இருந்து வந்த நடிகை ஷகீலா, தமிழில் தூள், வாத்தியார், ஜெயம், அழகிய தமிழ்மகன், பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட திரைப்படங்களில் காமெடி கேரக்டரில் நடித்துள்ளார்.

நடிகை ஷகீலாவை அனைவரும் கவர்ச்சி பாவையாகவே பார்த்து வந்த நிலையில் ஸ்டார் விஜய் தமிழில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2-வில் பங்கேற்று சின்னத்திரை ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மக்களுக்கு தன் மீது புதியதொரு பார்வையை ஏற்படுத்தினார். இந்த குக்கிங் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று சுவையான உணவுகளை திறமையாக சமைத்து நிகழ்ச்சிக்கு நீதிபதியாக வந்த சமையல் நிபுணர்களை அசத்தினார். முதல் ரன்னர்-அப் ஆனார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சக போட்டியாளர்களால் நடிகை ஷகீலா அன்புடன் அம்மா என்று அழைக்கப்பட்டார். இந்த நிலாகியில் பங்கேற்றதன் மூலம் ஆயிரக்கணக்கான ரசிகர்களின் இதயங்களை வென்றார். தவிர மிலா என்ற திருநங்கையை தத்தெடுத்து மகளாக வளர்த்து வரும் நடிகை ஷகீலாவின் செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. இதனிடையே சோஷியல் மீடியாக்களில் நடிகை ஷகீலா மறைந்து விட்டதாக தகவல் பரவியது. இது நடிகை ஷகீலாவின் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது. நடிகை ஷகீலா இறந்து விட்டதாக பரவிய தகவல் உண்மையா அல்லது வதந்தியா என்ற குழப்பம் பலமணி நேரங்கள் நீடித்தது.

Also read... பிரபல ஓடிடியில் வெளியாகும் வஸந்தின் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்!

இதனிடையே தனது மரணம் பற்றி பரவிய தகவலுக்கு இறுதியாக நடிகை ஷகீலாவே வீடியோ ஒன்றை வெளியிட்டு முற்றுப்புள்ளி வைத்தார். இது தொடர்பாக தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பக்கத்தில் 48 நொடிகள் வீடியோ ஒன்றை நடிகை ஷகீலா போஸ்ட் செய்தார். அந்த வீடியோவில் நடிகை ஷகீலா கூறி இருப்பதாவது "வணக்கம், நான் இப்போது உயிரோடு இல்லை என்று சில செய்திகள் பரவுவதாக கேள்விப்பட்டேன். புரளியில் குறிப்பிட்டுள்ளபடி எனக்கு தற்போது உடல்நலக்குறைவு ஏதும் நிச்சயமாக இல்லை. என் முகத்தில் ஒரு பெரிய புன்னகையுடன் நான் தற்போதும் மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன். 
View this post on Instagram

 

A post shared by The Shakila (@imshakila_official)


யாரோ என்னை பற்றி மோசமான செய்திகளைப் பரப்பி உள்ளார்கள். அந்த செய்தி உண்மையா என்பதை தெரிந்து கொள்ள எனக்கு நிறைய கால்ஸ் மற்றும் மெசேஜ்கள் வருகின்றன. மக்கள் என் மீது காட்டும் அன்புக்கு நன்றி. என்னை பற்றி வதந்தியை பரப்பிய நபருக்கு நன்றி, ஏனென்றால் அந்த புரளி தான் ஏராளமான மக்களை என்னை பற்றி தற்போது சிந்திக்க வைத்துள்ளது"என்று குறிப்பிட்டுள்ளார். அனைவருக்கும் வணக்கம், வதந்திகளை நம்பாதீர்கள்! எல்லாம் வல்ல இறைவனின் ஆசியுடன் நான் நலமாக உள்ளேன். உங்கள் அனைவரின் அன்புக்கும் நன்றி. எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம் என்ற கேப்ஷனுடன் இந்த வீடியோவை நடிகை ஷகீலா ஷேர் செய்து உள்ளார்.
Published by:Vinothini Aandisamy
First published: